articles

My journey into Birding

Angeline Mano, 20

Birding

Better than all measures,

Better than all treasures,

Those in books are found.

SEEDS OF FEATHERS

My mother was the one who sowed the seeds of birding in me during my school days. She used to show me birds around us, tell their names and some behaviour. Another reason for my interest toward birds was because of my mum’s habit of feeding them by placing water and grains at the backyard. Crows, Mynas and few other species visited and used to feed on grains and sometimes watching those feeding their young made me to think more about it.

Since childhood, I have always had great love for nature. My grandmother’s place is a village near Thamirabarani River (Porunai) and I used to watch the black waterbirds (later I knew them as Cormorants) with delight. As days passed, enjoying the sounds of birds was becoming a habit. On January 12, 2018, my parents bought me a camera and I started photographing birds.

FIRST STEP INTO BIRDING

As I didn’t have proper guidance to birding, finding the names of birds was a task on its own. One day I just simply captured a colourful bird and sent it to one of my college seniors who had immense love for birding. Tamil Selvan told me that it was a Coppersmith Barbet Psilopogon haemacephalus and the bird got its name because of its call which is similar to that of a coppersmith striking a metal with hammer. He further gave me an introduction to birding, taught me bird names, interesting behaviours and suggested some books. I was in awe of the fact that there’s plenty to know about birds and there started my journey into birding. After this, my love for birding grew exponentially as I began to watch more and videographing their beauty. Few weeks later, Tamil Selvan explained me about eBird, an international platform to document and monitor birds. I registered at once and I regularly contribute data and upload images as well.

COBA by AM
Coppersmith Barbet, my gateway to birding. Photograph by Angeline Mano

BUDDING DAYS OF BIRDING

One day from my balcony, I was so thrilled to see a Purple Sunbird Cinnyris asiaticus going near the nest of Scaly-breasted Munia Lonchura punctulata and they became noisy. Mommy Scaly-breasted Munia and Daddy Scaly-breasted Munia were guarding their nest. Later I found that there were juveniles in the nest.

On September 2018, I visited Kannankurichi (Mookaneri) Lake with Tamil Selvan. I saw many species including Little Cormorant Microcarbo niger, White-breasted Waterhen Amaurornis phoenicurus, Little Grebe Tachybaptus ruficollis, Indian Pond Heron Ardeola grayii, Asian Koel Eudynamys scolopaceus, Striated Heron Butorides striata, Tricolored Munia Lonchura malacca. That was a great new experience for me and glad I took my best companion Nikon D3400 to click those birds. Please see the complete checklist here.

TRMU by AM
Tricolored Munia photographed by Angeline Mano at Kannankurichi Lake

FROM DISAPPOINTMENT TO DELIGHT

As I became so passionate in birding, even the small call of birds was so sharp to my ears. One day as I returned home from college, I heard a different call which I hadn’t heard before. So, I took my camera and went searching for the bird but couldn’t find it. I returned disappointed and few minutes later I heard the same call from backyard. This time, I just got a glimpse of its tail. To get a good view, I literally climbed the wall and clicked the bird and referred the book to know its name. It was a Rufous Treepie Dendrocitta vagabunda. That was an awesome and thrilling moment! These days, every time when I just hear the calls, I am unable to ignore it and I start to bird.

RUTR by AM
Rufous Treepie photographed by Angeline Mano

I’m so thankful to my parents and my uncle Shenbaharaman for motivating me in birding. My uncle said that it is better to do birding, enter the field of ornithology and live along with birds and show people their beauty and importance rather than doing other profession. These words penetrated deep into my heart and mind and made me to continue birding with more vigour.

LOVE FOR BIRDING

Birding is a feeling that cannot be expressed in words. When I am birding, I just forget myself and never take my eyes from it. Watching them doing cute things gives a great relaxation and bliss to mind and heart. What I love about birds is—how they behave, because just by observing them we can understand lot of things in life. Birds connect us to nature. In future, I will show people how to conserve the natural world and I really hope that birding and birds will help me to do this.

I also strongly recommend everyone irrespective of their age, to take birding as a hobby and fly with them!

My journey into Birding Read More »

தமிழ்நாட்டுக் கிளிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்,” அறிவியல் மாத இதழில் ஜூன் 2017 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு. வே. கணேஷ்வர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயத்தில் (Grizzled Squirrel Wildlife Sanctuary) மூன்று நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டு அனுபவமுள்ள பறவை ஆர்வலர்களை அழைத்திருந்தது. இந்தியாவில் கொண்டை வல்லூறு பற்றிய ஆராய்ச்சிகளில் தலைசிறந்தவரான சஷிகுமார், என்னையும் இக்கணக்கெடுப்பில் பங்குகொள்ளச் சொன்னார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல அனுபவமிக்க பறவை ஆர்வலர்கள் இராஜபாளையத்திற்கு வந்திருந்தனர். குழுவுக்கு இரண்டு நபர்களாகப் பிரித்து சரணாலயத்தின் பல்வேறு இடங்களில் கணக்கெடுப்பு நடத்துவதே திட்டம். வழிகாட்டுதலுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் இரண்டு வனத்துறை ஆட்கள் உடன் வந்தனர்.

யானைக்காசம் முதல் கன்னிமார் கோயில் வரை

என்னுடன் பாம்புகள் பிடிப்பதில் அனுபவமுள்ள கிஷோர் குமாரும் வந்தார். கணக்கெடுப்பிற்காக எங்களுக்கு தரப்பட்ட பகுதி யானைக்காசத்திலிருந்து கன்னிமார் கோயில் வரை. முதல் நாள் மாலை இராஜபாளையத்திலிருந்து கிளம்பி காட்டிலுள்ள தங்கும் முகாமை அடையவே இரவு 10.30 மணி ஆகிவிட்டது. மறுநாள் விடியற்காலை எழுந்தவுடன் நடுகாட்டில் அத்துனைப் பறவைகளின் இனியகானம் உள்ளத்தை உற்சாகத்தில் நனைத்தது. கண் விழித்துப் பார்த்ததும் முதலில் தென்பட்டது கருந்தலை மாங்குயில் (Black-hooded Oriole). ஆஹா! ஒவ்வொரு நாளையும் இதுபோல் அல்லவா தொடங்க வேண்டும்! என்னே ஒரு அழகான பறவை!

BHOR by Vijayalakshmi Rao
கருந்தலை மாங்குயில். படம்: விஜயலக்ஷ்மி ராவ்

கணக்கெடுப்பு முடியும் வரை அதிக எண்ணிக்கையில் இருந்த பறவைகளில் இதுவும் ஒன்று. வலசைக் காலம் முடிந்த பிறகும் ஆறுமணிக்குருவி (Indian Pitta), பச்சைக் கதிர்க்குருவி (Green Warbler), வேலி கதிர்க்குருவி (Blyth’s Reed Warbler), பழுப்புக் கீச்சான் (Brown Shrike) போன்ற விருந்தாளிப் பறவைகளைக் காண சற்றே வியப்பாக இருந்தது. கணக்கெடுப்பின் போது தமிழகத்தின் நான்கு கிளி இனங்களையும் ஒரே நாளில் பார்த்தது அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அனைத்து நாட்களும் ஒரு சேர பார்க்கக் கூடிய நிகழ்வல்லவே அது!

கிளிகளின் பொதுப் பண்புகள்

இந்தியாவில் 11 கிளி இனங்கள் காணப்படுகின்றன. அனைத்துமே பச்சை நிறம் கொண்டவை. குட்டைக் கிளியைத் தவிர மற்ற கிளிகளுக்கு நீண்ட வால் இருக்கும். வளைந்த, உறுதியான அலகுகள் கொட்டைகளைக் கொறிப்பதற்கு பயன்படுகிறது. பெரும்பாலான கிளிகள் எப்போதும் கத்திக்கொண்டும் கூட்டமாக வாழும் பண்புடையவை. உணவு அதிகம் கிடைக்கும் இடங்களில் கிளிகள் அதிக எண்ணிக்கையில் கூடும். பழங்கள், பூமொட்டுக்கள், போன்றவற்றையும் கிளிகள் உண்ணும்.

பச்சைக் கிளி (Rose-ringed Parakeet) 

“ஜோசியம்… கிளி ஜோசியம்…” என்று கூண்டுகளில் அடைத்து நம் தெருக்களில் எடுத்து வரப்படுவது இக்கிளியே. ஆண் கிளிக்கு கழுத்தில் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வளையம் இருப்பது போல பெண்ணுக்கு இருக்காது. பெரிய பச்சைக் கிளியின் (Alexandrine Parakeet) சிறு வடிவம் போல் இருந்தாலும் இவற்றுக்கு தோளில் அரக்கு நிறப் பட்டை இருக்காது. தமிழகத்தில் பரவலாகத் தென்படும் இக்கிளி கணக்கெடுப்பின் போதும் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டது.

RRPA by Udaya Kumar
பச்சைக் கிளி. படம்: உதய குமார்

செந்தலைக் கிளி (Plum-headed Parakeet) 

இது பச்சைக் கிளியை விட உருவில் சற்று சிறிதாக இருக்கும். ஆண் பறவையின் தலை சிவப்பு நிறத்திலும் கழுத்தில் கருப்பு வளையமும் தோளில் சிறிய சிவப்பு நிறப் பட்டையும் இருக்கும். பெண் கிளியின் தலை சாம்பல் நிறத்திலும் கழுத்தில் வளையமின்றியும் தோளில் சிவப்பு நிற பட்டையும் இல்லாமல் காணப்படும். இரண்டு பறவைகளின் மேல் அலகு மஞ்சள் நிறத்திலும் கீழ் அலகு கருப்பு நிறத்திலும் இருக்கும்.

PHPA by Vijayalakshmi Rao
செந்தலைக் கிளி. படம்: விஜயலக்ஷ்மி ராவ்

சோலைக் கிளி (Malabar Parakeet) 

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் இக்கிளி ஒரு ஓரிடவாழ்வி (endemic). செந்தலைக் கிளியின் அளவுள்ள இது சிறிது சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். ஆண் பறவையின் அலகு சிவப்பு நிறத்திலும் பெண்ணின் அலகு கருப்பாகவும் இருக்கும். இரண்டிற்குமே கழுத்தில் கருப்பு நிற வளையம் இருக்கும். ஆனால் ஆணின் கழுத்தில் கருப்பு வளையத்தைச் சுற்றி நீலம் கலந்த பச்சை வளையமும் காணப்படும்.

MAPA by Udaya Kumar
சோலைக் கிளி. படம்: உதய குமார்

சின்னக் கிளி (Vernal Hanging Parrot) 

இந்தியாவின் மிகச் சிறிய கிளி இனமான இப்பறவை சிட்டுக்குருவியின் அளவு இருக்கும். உடல் பச்சை நிறத்திலும் அலகும் கீழ் முதுகும் சிவப்பு நிறத்திலும் வால் குட்டையாகவும் இருக்கும். ஆண் பறவையின் தொண்டையில் சிறிய நீல நிற இறக்கைகள் தென்படும். இவை பசுமைமாறாக் காடுகளிலும் ஈரப்பதமான குறுங்காடுகளிலும் வசிக்கும்.

VHPA by Vijayalakshmi Rao
சின்னக் கிளி. படம்: விஜயலக்ஷ்மி ராவ்

 

குறிப்பு: Alexandrine Parakeet தமிழ்நாட்டில் சில இடங்களில் பார்க்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் கூண்டிலிருந்து தப்பித்தக் கிளிகளாகவே கருதப்படுகின்றன. இயற்கையான வாழிடங்களில் அக்கிளியின் இனப்பெருக்கத்தை தமிழ்நாட்டில் பதிவு செய்தால் மட்டுமே அது அதிகாரப்பூர்வமான தமிழ்நாட்டுப் பறவைப் பட்டியலில் சேர்க்கப்படும்.

தமிழ்நாட்டுக் கிளிகள் Read More »

பாம்புத்தாராவும் நானும்

எழுத்து: செந்தில் குமார், தலைமை ஆசிரியர் (மற்றும் பறவை ஆர்வலர்), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணம்புதூர், சேலம்.

சனிக்கிழமை எனக்கு விடுமுறை. என் மகனுக்கு பள்ளி வேலைநாள். காலை எட்டு மணிக்கு அவனை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டுக் கிளம்பும் போது, சரி இன்றும் பவளத்தானூர் ஏரிக்குச் செல்லலாமே என்ற உந்துதல் ஏற்பட, வண்டி ஏரியை நோக்கிச் சென்றது.

வற்றாத ஏரியின் ரகசியம்

எங்கள் ஏரியைப் பற்றி சொல்லியேத் தீர வேண்டும். சேலம் தாரமங்கலத்திலிருந்து முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எக்காலத்திலும் அந்த ஏரி வற்றியதாக வரலாறு கிடையாது. பெரிய பெரிய ஏரிகள் வறண்டாலும் எங்கள் ஏரியில் நிச்சயம் கொஞ்சம் நீராவது தேங்கிக்கொண்டு தான் இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் அங்கு நிலவும் நீர்வளம் அல்ல. தாரமங்கலம் பகுதியின் கழிவுநீர் அனைத்தும் சென்று சேரும் ஒரே இடம் அந்த ஏரி தான். கழிவுநீர் சென்று சேரவில்லை என்றால் பவளத்தானூர் ஏரி எப்பொழுதும் வறண்ட நிலம் தான்.

பாம்புத்தாராவின் தரிசனம்

இருப்பினும் இவ்வளவு அசுத்தமான நீரில் பல வண்ணமயமானப் பறவைகள் வாழ்வது மிகப் பெரிய ஆச்சர்யமே. வழக்கம் போல நாமக்கோழி, முக்குளிப்பான் உள்ளிட்ட பறவைகளே தென்பட்டன. சரி, வீட்டிற்கு கிளம்பலாம் என்று வண்டியைத் திருப்பியப் போது திடீரென்று உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு உந்துதல் என்னை நிற்கச்செய்தது. ஏரியில் ஏதோ ஒரு வித்தியாசமான உருவம் தெரிகிறதே என்று பார்த்தேன். தொலைவில் இருந்து பார்க்கும் போது ஏரியில் வெட்டப்பட்ட அடிமரத்தின் அடியில் இருந்து ஒரு குச்சி நீட்டிக்கொண்டு இருப்பது போலத் தெரிந்தது. சரி ஒன்றுமில்லை, திரும்பலாம் என்று நினைத்த போது அந்தக் குச்சி இலேசாக அசைந்தது.

796px-Eurasian_Coot_RWD
ஏரியின் நீர்ப்பறவைகளில் ஒன்றான நாமக்கோழி. பட உதவி: விக்கிமீடியா காமன்ஸ்

அருகில் சென்று உன்னிப்பாகப் பார்த்தேன். ஆஹா! அது ஒரு பாம்புத்தாரா (ORIENTAL DARTER Anhinga melangogaster)! என்னே ஒரு அழகானப் பறவை! அன்று முதன்முதலாகப் பார்த்தப் போது ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிட முடியாதது. நாற்பது அடி தொலைவிலிருந்து தரிசனம் கொடுத்தது சேலம் பறவையியல் கழகத்தின் முத்திரைப் பறவையான எங்கள் பாம்புத்தாரா!

பெயர்க்காரணம் புரிந்தது

அந்தச் சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். என்னைத் தவிர அதைக் கண்டுகொள்ள ஆளில்லை. தன் இரண்டு இறக்கைகளையும் விரித்துக்கொண்டு “உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன். என்னைத் தழுவிக்கொள்” என்று சொல்வது போல நின்றுகொண்டிருந்தது. ஏரிக்கு முதல் வருகை என்பதால் புகைப்படம் எடுத்துக்கொள்ள நண்பர் ராஜ்குமாரை அழைத்தேன். பத்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொன்னவர் என்ன காரணத்தினாலோ அரை மணி நேரமாகியும் வரவில்லை. “உனக்காக நான் இறகுகளை விரித்துக்கொண்டு அழகாக நிற்கிறேனே, என்னை வரவேற்க ஒரு புகைப்படம் கூட எடுக்க மாட்டாயா?” என நினைத்தது போலும் உடனே நீருக்குள் இறங்கி மறைந்து விட்டது. அது நீந்திச் செல்லும் போது தான் கவனித்தேன். மற்ற பறவைகள் எல்லாம் நீருக்கு மேல் மிதந்து கொண்டு செல்ல பாம்புத்தாராவின் உடல் மட்டும் நீருக்குள் இருக்க அதன் தலை மட்டும் பாம்பு போல் நீட்டிக்கொண்டு சென்றது. அப்போதே அது ஏன் பாம்புத்தாரா என்று அழைக்கப்படுகிறது என்பது புரிந்தது. தொலைவிலிருந்து பார்க்கும் போது நீரில் ஒரு குச்சி நகர்ந்து செல்வது போலத்தான் இருந்தது.  அரை மணி நேரமிருந்தும் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்ற ஏமாற்றத்துடன் வீட்டிற்குச் சென்றேன்.

Bharatpur Darter by Samyak Kaninde
மீன் வேட்டையில் பாம்புத்தாரா. பட உதவி: சம்யக் கணின்டே

கோபித்துக்கொண்டப் பாம்புத்தாரா 

புகைப்படம் எடுக்காமல் வந்துவிட்டோமே என்ற நினைவே என்னை முழுவதுமாக பாதித்திருந்தது. நண்பரை மீண்டும் அலைபேசியில் தொடர்பு கொள்ளாமல் நேராக ஸ்டுடியோவிற்கே சென்று ஆளை அப்படியே வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு பத்து மணி அளவில் ஏரிக்குச் சென்றேன். வரும்போதே நம் பாம்புத்தாரா எங்கும் சென்றுவிடக் கூடாது என்று சாமியைக் கும்பிட்டுக்கொண்டே வந்தேன்.

அப்பாடா! இன்னும் என் பாம்புத்தாரா அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. நண்பர் பையிலிருந்து கேமிராவை எடுத்து பாம்புத்தாரவை நோக்கி வைத்தார். சிறிய, கரிய குன்றென நின்றிருந்தப் பாம்புத்தாரா, “உங்களுக்காக நான் வெயிட் பண்ண டைம் முடிஞ்சு போச்சு. ஸோ, நான் கெளம்பறேன்” என்று கோபித்துக்கொண்டு பறந்து விட்டது. மீண்டும் ஒரு முறை பெரும் ஏமாற்றமும் வேதனையுமே மிஞ்சியது.

ஒரு வாரத்திற்குப் பின் சிறகிறங்கியது 

நமக்கு கொடுத்து வைத்ததெல்லாம் அவ்வளவு தான் என வீடு திரும்பினேன். பவளத்தானூர் ஏரியைக் கடந்து செல்லும் போதெல்லாம் பாம்புத்தாரா கோபம் தணிந்து மீண்டும் வந்திருக்குமா என்று பார்த்துக்கொண்டே செல்வேன். ஒரு வாரம் கழிந்தது.

அன்று பள்ளி செல்ல காலை 08.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். ஏரியைக் கடக்கும் போது ஆர்வத்துடன் தேடினேன். என்ன ஒரு ஆச்சரியம்! மீண்டும் அதே இடத்தில் சிறகிறங்கி வந்திருந்தது எங்கள் பாம்புத்தாரா! எனக்கோ அளவில்லாத மகிழ்ச்சி! நண்பரை அலைபேசியில் தொடர்புகொள்ள உடனடியாக அவரும் கேமிராவோடு வந்துவிட்டார். அப்புறம் என்ன? ஒரு கிளிக்கோடு நிறுத்துவோமா? பல படங்கள் கிளிக்கியாச்சு!

Pavalathanoor Darter
பவளத்தானூர் ஏரியின் பாம்புத்தாரா. பட உதவி: சுப்ரமணிய சிவா. செ

என் மனதில் இடம் பிடித்த பாம்புத்தாரா இனி எங்கள் வீட்டிலும் இடம் பிடிக்க புகைப்படமாக மாறியது! மீண்டும் சந்திப்போம் என நன்றி சொல்லிவிட்டு நான் பள்ளிக்குச் செல்கையில் அது மீன் வேட்டைக்குச் சென்றுவிட்டது!

பாம்புத்தாராவும் நானும் Read More »

சிறகு விரிக்கும் ஓர் எழுத்தாணி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்,”  அறிவியல் மாத இதழில் ஜூன் 2018 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர்

விசிறிக்கொண்டை ஒய்யாரி

சிறகு விரித்தால் சிங்காரி

பறக்கும் அழகென்ன

நடக்கும் பவிசென்ன

போயும் போயும் தின்பாளே

புழுவைத் தரையில் கொத்தியே

–ஆசைத்தம்பியின் கொண்டலாத்தி கவிதைத் தொகுப்பிலிருந்து.

இனங்கள்

கொண்டலாத்தி (Eurasian Hoopoe), ஆப்பிரிக்க கொண்டலாத்தி (African Hoopoe), மற்றும் மடகாஸ்கர் கொண்டலாத்தி (Madagascan Hoopoe).

ஆங்கிலப் பெயர்க்காரணம்

தன் வாழிட எல்லையைக் குறிக்கவும் இணையைக் கவரவும் “ஹூப்ஹூப்பூப்… ஹூப்ஹூப்பூப்…” எனக் குரலெழுப்பும். இந்த ஒலியை வைத்தே அதன் பெயர் ஆங்கிலத்தில் “ஹூப்போ” (Hoopoe) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மண்கொத்தியா அல்லது மரங்கொத்தியா?

பெரும்பாலானோர் கொண்டலாத்தியைப் பார்த்தவுடன் மரங்கொத்தி என்று எண்ணுகின்றனர். அதன் அலகு நீளமாக இருப்பது காரணமாக இருக்கலாம். பத்திரிக்கைகளிலும் பல நேரம் இப்படி தவறாக இடம் பெற்றுவிடுகிறது. ஆனால் இது மரங்கொத்தி அல்ல. வேண்டுமானால் மண்கொத்தி என்று அழைக்கலாம். ஏனெனில் மரங்கொத்தியைப் போல மரத்தைக் கொத்தாமல் தன் நீண்ட எழுத்தாணி போன்ற அலகின் மூலம் நிலத்தில் உள்ள மண்ணைக் கொத்திக் கிளரி இரை தேடி உண்ணும்.

பிற வழக்குப் பெயர்கள்

கொண்டலாத்தி, கொண்டை வளர்த்தி, எழுத்தாணிக் குருவி, விசிறிக்கொண்டைக் குருவி, புழுக்கொத்தி, கொண்டை உலர்த்தி, சாவல் குருவி, கொண்டஞ்சிலாடி.

பரவல் மற்றும் வாழிடம்

ஐரோப்பா, ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கரிலும் பரவி உள்ளது. வெற்றுத் தரை உள்ள நிலங்களில் அல்லது சிறிது தாவரங்கள் வளர்ந்த நிலப்பரப்பில் இவை உணவு தேடும். செங்குத்தான, பொந்து உள்ள இடங்களில் முட்டை இட விரும்பும். இந்த இரு தேவைகளையும் பல்வேறு வாழிடங்கள் நிறைவு செய்யும் காரணத்தினால் கொண்டலாத்தி பெரும்பாலான பகுதிகளில் வசிக்கிறது. கொண்டலாத்தி இஸ்ரேலின் தேசியப் பறவையாகும்.

Hoopoe_with_insect
அலகில் பூச்சியுடன் கொண்டலாத்தி. படம்: விக்கிமீடியா காமன்ஸ்

பண்புகள்

பறக்கத் துவங்கும் முன்பாகவும் உணர்ச்சியை வெளிப்படுத்தவும் தலையில் உள்ள கருநுனிக் கொண்டையை விசிறி போல விரித்துச் சுருக்கும். கொண்டலாத்திகள் தரையில் அமர்ந்து சிறகுகளை விரித்து தலையை சற்று தூக்கி படுத்துக்கொள்வது போல செய்யும். நீண்ட காலமாக இதை ஒரு தற்காப்பு முறை என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் வெயில் காயத்தான் அப்படி செய்கிறது என்று பின்னாளில் புலப்பட்டது. இவற்றுக்கு மண் குளியல் செய்யவும் பிடிக்கும்.

உணவு

வெட்டுக்கிளிகள், வண்டுகள் என பெரும்பாலும் பூச்சிகளே இவற்றின் பிரதான உணவு. சிறு ஊர்வன, தவளைகள், சிறு விதைகள், பழங்களையும் கூட உண்ணும். தனியாகவே இரை தேடும் பழக்கமுடையவை.

இனப்பெருக்கம்

சுவர் மற்றும் மரங்களில் உள்ள பொந்தில் கூடமைக்கும். பெண் பறவை மட்டுமே முட்டைகளை அடை காக்கும். தென்துருவத்தில் வாழும் பறவைகளை விட வடதுருவத்தில் வாழ்பவை அதிக எண்ணிக்கையில் முட்டைகள் இடும். வால் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுரப்பியிலிருந்து துர்நாற்றம் மிக்க திரவத்தை வெளியேற்றுவதன் மூலம் இரைகொல்லிகளிடமிருந்து கூட்டை தற்காத்துக்கொள்கின்றன. அந்த திரவத்தை இறைக்கைகள் முழுவதும் பூசிக்கொள்ளும். அழுகும் இறைச்சி போன்ற நாற்றமுடைய இத்திரவம் குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியேறுமுன் சுரப்பது நின்றுவிடும். முட்டைகளை 15 முதல் 18 நாட்கள் வரை அடைகாக்கும். இக்காலத்தில் பெண்ணுக்கு ஆண் பறவை உணவளிக்கும். முதல் முட்டை இட்டவுடன் அடைகாக்கத் துவங்குவதால் குஞ்சுகள் வெவ்வேறு சமயத்தில் பொரிக்கும்.

மனிதர்களும் கொண்டலாத்திகளும்

கொண்டலாத்திகள் பரவி உள்ள இடங்களில் இவற்றுக்கு கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. பண்டைய எகிப்தில் இவை புனிதமாகக் கருதப்பட்டு கோவில் சுவர்களில் வரையப்பட்டன. செங்கடலைக் கடந்த பின்பு மோசஸ் மற்றும் இஸ்ரேலின் குழந்தைகள் நசுக்கப்படுவதிலிருந்து கொண்டலாத்தி அவர்களைக் காப்பாற்றியதாக இசுலாமிய இலக்கியம் கூறுகிறது. பெர்சியப் பாடல் ஒன்றில் பறவைகளுக்குத் தலைவனாக ஒரு கொண்டலாத்தி இடம்பெறுகிறது.

பாதுகாப்பு

விவசாயத்திற்கு சேதம் விளைவிக்கக்கூடிய பல பூச்சியினங்களை கொண்டலாத்திகள் உண்பதால் மனிதர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. இக்காரணம் கருதியே பல நாடுகள் சட்டப்படி இவற்றை பாதுகாக்கின்றன.

 

கொண்டலாத்தி உன்வரவால் கொள்ளை இன்பம்

கொண்டையாட்டி நீநடந்தால் கூடுங் கொஞ்சம்

வெண்ணிறமும் கருநிறமும் இறகில் மின்னும்

விரிவானின் வில்போலே வியப்பைக் கூட்டும்

அண்டைவயல் வெளிகளிலே அன்பே உன்னை

அன்றொருநாள் கண்டதிலே ஆவல் கொண்டேன்

கண்மணியே எம்கானைக் காண்பாய் என்றேன்

கானிலுனைக் கண்டதுமே களித்தே விட்டேன்

உண்டிருந்தாய் பூச்சிகளை ஒருநாள் இங்கே

ஒளிந்துன்னைப் பார்த்துவிட்டேன் உயிர்ப்பூம் புள்ளே

மண்வண்ண உடம்பாலே மறையப் பார்த்தாய்

மாட்டிவிட்டாய் என்கண்ணில் மணிப்பூம் புள்ளே

கண்நிறைந்தாய் அழைப்பேற்றுக் கானுள் வந்தாய்

களிப்பீந்தாய் காணதற்குக் காசா கேட்டாய்

மண்டுகின்ற ஆசைகொன்றாய் மகிழ்வைக் கண்டாய்

மாந்தருன்போல் ஆசையின்றி மகிழ்வ தென்றோ?

–செல்வமணி அரங்கநாதனின் “மாட்டுவண்டியும் மகிழுந்தும்” என்கிற கவிதைத் தொகுப்பிலிருந்து.

ஒரு சுவாரசிய நிகழ்வு

அண்மையில் மாடியில் துணி காயவைத்துக் கொண்டிருந்த போது வழக்கம் போல வீட்டுக்கு வரும் கொண்டலாத்தி ஒன்று வந்தது. சிறிது நேரம் அதை ரசித்துக்கொண்டிருக்க அப்பறவை எதிர்வீட்டு வெண்டிலேட்டரின் சிலந்தி வலையை அலகால் நீக்கிவிட்டு அதில் சிக்கியிருந்தப் பூச்சிகளை உண்டது. கொண்டலாத்தி நீண்ட நேரம் அங்கு அமர்ந்திருந்ததைக் கண்ட கருந்தலை மைனா ஜோடிக்கு அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் தாங்க முடியவில்லை. முதலில் ஒரு மைனா சென்று அமைதியாக கவனித்தது. வெண்டிலேட்டர் சிறியது என்பதால் கொண்டலாத்திக்கு மட்டுமே இடம் இருந்தது. தனியாக கீழே இறங்கிப் பார்க்கும் அளவிற்கு அந்த கருந்தலை மைனாவுக்கு தைரியம் வரவில்லை.

Brahminy Starling
கருந்தலை மைனா. படம்: விக்கிமீடியா காமன்ஸ்

உடனே தன் இணையை அழைத்தது. இணை வந்த தைரியத்தில் கொண்டலாத்தி அமர்ந்திருந்த இடத்தில் இதுவும் அமர முயற்சித்தது. ஆனால் கொண்டலாத்தி கோபமாக விரட்டி விட்டது. பின்னர் கொண்டலாத்தி சென்றவுடன் இரண்டும் அமர்ந்து மீதமிருந்த சில பூச்சிகளை உண்டுவிட்டு பறந்தன. காகங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். ஆனால் கருந்தலை மைனாக்களுக்கு ஒரு பறவை செய்வதைப் பார்த்து தானும் அவ்வாறு செய்ய இவ்வளவு ஆர்வம் இருக்குமா என்பதை அன்று வரை நான் அறிந்திருக்கவில்லை. கொண்டலாத்தி வரமால் போயிருந்தால் கருந்தலை மைனாக்களின் இந்தப் பண்பு எனக்குத் தெரியாமலேயே போயிருக்கலாம்.

சிறகு விரிக்கும் ஓர் எழுத்தாணி Read More »

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறுவர்களுக்காக வெளியிடும் “துளிர்”  அறிவியல் மாத இதழில் ஜனவரி 2018 பிரசுரமானக் கட்டுரையின் முழு வடிவம். எழுத்து: சு.வே. கணேஷ்வர்.

இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களுக்கு மட்டுமே மாநிலப் பறவையாக புறா இனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை Emerald Dove மரகதப் புறா (தமிழ்நாடு), Yellow-footed Green Pigeon மஞ்சள் கால் பச்சைப் புறா (மகாராஷ்டிரா), Green Imperial Pigeon காட்டு பச்சைப் புறா (திரிபுரா) மற்றும் Andaman Wood Pigeon அந்தமான் காட்டுப் புறா (அந்தமான்).

பரவல் மற்றும் வாழிடம்

மரகதப் புறா இந்திய துணைக்கண்டம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் வரை பரவி உள்ளது. மழைக்காடுகள், அதை ஒத்திருக்கும் ஈரமான காடுகள், தோட்டங்கள், தோட்டங்களில் வாழும்.

உடலமைப்பு

வளர்ந்த மரகதப் புறா 27 செண்டிமீட்டார் நீளமும் (அலகின் நுனி முதல் வால் நுனி வரை) 90 முதல் 174 கிராம் வரை எடை இருக்கும். உடல் பழுப்பு நிறம். ஆண் பறவைகளின் தலை வெளிர் சாம்பல் நிறத்திலும் பெண்ணின் தலை பழுப்பாகவும் இருக்கும். இரண்டிற்குமே வெள்ளைப் புருவம் உண்டு. குட்டையான அலகு ஆரஞ்சு நிறத்திலும் இறக்கைகளும் தோள்பட்டையும் மிளிரும் மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பார்க்கும் போதே மனதைப் பறிக்கும் அழகு அது! பறக்கும் போது வாலும் இறக்கையின் வெளிப்புறமும் கருப்பாகத் தெரியும்.

EMDO மெல்வின்
தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப் புறா. படம்: மெல்வின் ஜெய்சன்

பண்புகள்

மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும் கூட இவை எங்கும் இடித்துக் கொள்ளாமல் வேகமாகவும் தாழ்வாகவும் பறக்கும். மிகுந்த கூச்ச சுபாவம் உள்ள இவற்றைக் காண்பது சற்று சிரமம் தான். தனியாகவோ, ஜோடியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ வாழும். காட்டின் தரையில் விழுந்துள்ள பலவிதமான பழங்கள், செடி விதைகள் சில நேரங்களில் கரையான்களையும் உண்ணும். இதனால் விதைப் பரவலுக்கு உதவுகின்றன. நாம் காட்டுப் பாதை வழியாக பயணிக்கும் போது ரோட்டில் இவை இரை தேடுவதைக் காண இயலும்.

இனப்பெருக்கம்

இனப்பெருக்கம் கோடைக்காலத்திற்கு முன்னதாக மற்றும் வசந்தகாலத்திலும் நடைபெறும். இணை சேரும் முன்பாக ஆண் பறவை தலையை முன்னும் பின்னும் அசைத்து நடனமாடி பெண்ணைக் கவரும். பொதுவாக மரத்தில் ஐந்து மீட்டர் அளவில் தான் குச்சிகளை வைத்து கூடமைக்கும். இரண்டே இரண்டு கிரீம் நிற முட்டைகளை இடும். பெண் பறவை மட்டுமே முட்டைகளை அடைகாக்கும். 13 முதல் 15 நாட்களுக்குப் பிறகு குஞ்சுகள் பொரிக்கும்.

பாதுகாப்பு

இந்திய வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தால் இவை பாதுகாக்கப்படுகின்றன. இதனால் இவற்றின் எண்ணிக்கை நல்ல நிலையில் உள்ளது. தற்போதைக்கு இவை அழிவை நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. ஆனால் மரகதப் புறாக்களின் கறி சில நோய்களை குணமாக்கும் என்ற மூடநம்பிக்கையால் சில இடங்களில் வேட்டையாடப்படுகின்றன. இப்புறாக்களை துன்புறுத்துவதோ வேட்டையாடுவதோ கூண்டுகளில் அடைத்து வைப்பதோ கடத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை Read More »

பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்

தி ஹிந்து நாளிதழின் உயிர் மூச்சுப் பகுதியில் 04-07-2015 அன்று வெளியான கட்டுரை. எழுத்து: சு. வே. கணேஷ்வர்.

பறவை நோக்குதலில் (Bird watching) உங்களுக்கு ஆர்வமிருந்தால், அதைத் தொடங்கிய நாட்கள் சுவாரசியமாகவும் வேடிக்கைகள் நிறைந்ததாகவும் நீங்காத நினைவுகளாக நெஞ்சில் வலம்வரும். நாம் பார்த்த பல பறவைகளைத் தவறாக அடையாளம் காண்பதும் பின்னாளில் அந்நிகழ்வுகளையும் நமது அறியாமையையும் எண்ணி மனதுக்குள் புன்னகை பூப்பதும் பறவை ஆர்வலர்களின் வாழ்க்கையில் தோன்றும் இன்பமான தருணங்களில் ஒன்று.

குழந்தைப் பருவம் முதலே அனைத்து உயிர்களிடமும் இயற்கையான ஈர்ப்பு இருந்தாலும் குடும்பத்தின் உதவியின்றி, நானே அனைத்தையும் தேடித் தேடிக் கற்றுக்கொண்டது சிறு வயதில் சவாலான காரியமாகவே இருந்தது. 2007-ம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்த தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நீர்நிலைகள் குறித்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தேன். தேசிய அளவில் ‘இளம் விஞ்ஞானி’ என்ற அடையாளம் அதற்குக் கிடைத்த பின்னரே, சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் என் ஈடுபாடு அதிகரித்தது.

இணையதளமும் இருநோக்கியும்

சேலத்தில் உள்ள கன்னங்குறிச்சி மூக்கனேரி ஏரிக்கு அடிக்கடி சென்றுவந்ததால் பறவைகள் மீது தானாகவே காதல் ஏற்பட்டது. பறவைகளின் பெயர்களைக் கண்டறிய உதவும் களவழிகாட்டிகள் (Field guides) பற்றி, அப்போது நான் அறிந்திருக்கவில்லை. பள்ளிப் படிப்பு, பிற போட்டிகள் மற்ற நாட்களை எடுத்துக்கொள்ள, விடுமுறை நாட்களில் மட்டுமே என் பறவை நோக்கும் செயல்பாடு மூன்று வருடங்களைக் கடந்தது. பல ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவிலிருந்து என் மாமா வாங்கிவந்த 20×60 இருநோக்கி (Binocular), ஒரு குறிப்பேடு, பேனா, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டுவிடுவேன்.

விக்கிபீடியா வழிகாட்டி

பார்க்கும் அனைத்துப் பறவைகளும் புதிதாக இருப்பதால், ஒவ்வொரு நொடியும் ஆச்சரியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது. எந்தப் பறவையைப் பார்த்தாலும் அதன் அடையாளங்களையும் பண்புகளையும் உடனடியாகக் குறித்துக்கொள்வேன். வீட்டுக்கு வந்தவுடன் அருகில் இருக்கும் இணைய மையத்துக்குச் சென்று கூகுளில் ‘Birds of TamilNadu’ என்று தட்டச்சு செய்தால், விக்கிபீடியா பக்கம் வரும். அதில் இருக்கும் அனைத்துப் பறவைகளையும் ஒவ்வொன்றாகப் பார்த்து என்னுடைய குறிப்புகளுடன் எது பொருந்துகிறது என்று கண்டுபிடிப்பேன். இவ்வாறு ஒரு பறவையைக் கண்டுபிடிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. செய்து பார்த்தால் நிச்சயம் உணர முடியும்.

வளர்ந்துவரும் இளம் பறவை ஆர்வலர்கள் ஒரு பறவையைத் தவறாக அடையாளம் கண்டுவிட்டால், மற்றவர்கள் அதைப் பெருங்குற்றமாகக் கருதுகின்றனர். முகநூலில் இதுபோன்ற கத்துக்குட்டிகளை ஏளனம் செய்வதும், ஒரு பறவையின் சரியான பெயரைக் கண்டறியும் முடிவுக்கு வரும்வரை குழாயடிச் சண்டையிடுவதையும் நிறைய பார்த்துள்ளேன். இது போன்ற விஷயங்களைத் தவிர்த்து, பறவை ஆர்வலர்களுக்கான நெறிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.

நம் மனதுக்குப் புத்துயிரூட்டும் சிறந்த பொழுதுபோக்காக மட்டுமின்றி இயற்கையைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தை மனதில் விதைத்திடும் பறவை நோக்குதலை இன்றைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுத்து, இன்னும் பிறக்காத தலைமுறைகளுக்காக இயற்கையைப் பாதுகாப்பது நமது கடமைகளில் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!

சில சுவாரசியக் குறிப்புகள்:

  • சேலம் கன்னங்குறிச்சி புது ஏரியில் ஒரு நாள் எட்டு பெரிய நீல நிறப் பறவைகளை முதன்முதலாகப் பார்த்தேன். ‘கர…கர…’ எனக் கத்திக்கொண்டும் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டும் மேலிருந்து கீழாக வானில் பல கோணங்களில் பறந்து சாகசங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தன. தங்கள் இணையைக் கவரவே இது போன்ற சாகசங்களை அவை நிகழ்த்துகின்றன என்பது மட்டும் புரிந்தது. நிறம் மீன்கொத்தியைப்போல் இருந்தாலும், அலகு அவ்வாறில்லை. இது வேறு ஏதோ பெரிய மீன்கொத்தி வகையாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டே, அவற்றின் சாகசங்களை ரசித்துக்கொண்டிருந்தேன். பின்னரே தெரியவந்தது, அவை எட்டும் பனங்காடைகள் (Indian Roller) என்று.

    1 Roller by SGK
    பனங்காடை. படம்: செல்வகணேஷ் K
  • ‘கிக்கீ… கிக்கீ… கீகீ…’ என்ற குரல் கேட்டதும் கிளி எப்படி நிறுத்தி நிறுத்தி மெதுவாகவும் வழக்கத்துக்கு மாறாகவும் கத்துகிறது என்று குழம்பிப் போனேன். பின்னாளில் நான் கேட்ட ‘கிக்கீ’ வல்லூறுக்குச் (Shikra) சொந்தம் எனத் தெரிந்துகொண்டேன். பார்ப்பதற்குக் கழுகை ஒத்திருந்தாலும், மரங்களில் அமர்ந்து ஊர்வனவற்றை வேட்டையாடும் வல்லூறுகளைச் பல பகுதிகளில் எளிதாகப் பார்க்கலாம்.

    2 Shikra by Vijayalakshmi Rao
    வல்லூறு. படம்: விஜயலக்ஷ்மி ராவ்
  • வேதிவால் குருவியைப் பார்த்து வியக்காதவர் இருக்க முடியாது. நிறைய பேர் இதன் அழகைப் பார்த்தே பறவை நோக்குவதற்கு வந்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. விக்கிபீடியா பக்கத்தில் Asian Paradise Flycatcher from Palani Hills என்ற ஒளிப்படத்தைப் பார்த்து, ஓஹோ இதைப் பார்க்கப் பழனி மலைக்குத்தான் செல்ல வேண்டுமா என்று கவலைகொண்டதும் உண்டு. (கவனிக்க: பழைய பெயர்: Asian Paradise Flycatcher. புதிய பெயர்: Indian Paradise Flycatcher. பறவை புதிய பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்.)

    3 IPF by Melvin Jaison
    வேதிவால் குருவி. படம்: மெல்வின் ஜெய்சன்
  • குறிப்பிட்ட சில பறவை இனங்களில் பாலின ஈருருவத்தோற்றம் (Sexual dimorphism) இருப்பது பற்றி தெரியாததால், குயில்களில் (Asian Koel) ஆண், பெண் வித்தியாசத்தைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். ஆண் பறவை பளபளவென்று கறுப்பாக உள்ளது. ஆனால், பெண் பறவையோ பழுப்பு நிறத்தில் உடல் முழுதும் நிறைய வெண்புள்ளிகளுடன் காணப்படுகிறது. இதை எப்படி ஒரே இனம் என்று விஞ்ஞானிகள் வரையறுத்தார்கள் என்று யோசித்திருக்கிறேன். ஆனால், அது தகவமைப்பின் ஒரு பகுதிதான் என்பது பின்னால் புரிந்தது.
  • கரும்பருந்துகளை (Black Kite) எளிதாகக் கண்டறிய, அவற்றின் நீண்ட வாலில் பிளவு இருப்பதே முக்கியமான அடையாளம். அது தெரியாமல் பார்க்கும் அனைத்துக் கரும்பருந்துகளையுமே ஆளிக்கழுகுகள் (Tawny Eagle) எனக் குறித்து வைத்திருந்தேன். மேலும், ஒரு முறை தேன் பருந்தை (Oriental Honey-buzzard) பார்த்து, ராஜாளிக் கழுகு (Bonelli’s Eagle) என்று தவறாக நினைத்துள்ளேன்.
  • உடல் முழுக்கக் கருப்பும், நீண்ட வாலும், பாக்கு நிற இறக்கைகளும் கொண்ட பறவையை மாந்தோப்பு ஒன்றில் பார்த்தேன். பார்ப்பதற்குக் குயில் போல இருந்தது. இறக்கையின் நிறத்தை மட்டுமே கணக்கில்கொண்டு, ஹைய்யா ஒரு செவ்விறகுக் குயிலை (Chestnut-winged Cuckoo) பார்த்துவிட்டேன் என்று மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டு ஓடியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. பின்னரே தெரிந்துகொண்டேன் அது பரவலாகத் தென்படும் செண்பகம்/செம்போத்து (Greater Coucal) என்று. அதுவும் குயில் இனத்தைச் சேர்ந்ததுதான்.
  • குருவியின் நிறமுடைய ஒரு பெரிய பறவை வயல்களில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு பூச்சிகளைச் சுவைத்துக்கொண்டிருந்தது. அது ஒரு நெட்டைக்காலி (Pipit sp.). ஆனால் என்ன இனம் என்று பார்த்தபோது தெரியாது. அப்பறவை நெல் வயல்களின் அருகே சுற்றிக்கொண்டிருந்த காரணத்தை வைத்து, அது நெல்வயல் நெட்டைக்காலியாகத்தான் (Paddyfield Pipit) இருக்க வேண்டுமென்று முடிவுக்கு வந்தேன்.

    7 PAPI by Jegan
    வயல் நெட்டைக்காலி. படம்: ப. ஜெகநாதன்
  • ஆண் தேன்சிட்டுகளில் (Sunbirds), இறகு உதிரும் பருவம் (Eclipse plumage) இருப்பது பற்றி எனக்குத் தெரியாது. அப்படி ஒரு தேன்சிட்டைப் பார்த்தபோது, நானும் ஒரு புதுப் பறவை இனத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக நானே நம்பிக்கொண்டு மகிழ்ச்சியில் துள்ளியிருக்கிறேன்.
  • இவற்றையெல்லாம்விட வேடிக்கையான விஷயம் ஒன்று உண்டு. வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்காக, நாடுகளின் தலைநகரங்கள், தேசிய விலங்குகள், பூக்கள் போன்றவற்றைப் படிக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலைக் கழுகு (Bald Eagle). ஒரு முறை கன்னங்குறிச்சி ஏரியில் அமெரிக்காவின் தேசியப் பறவையைக் கண்டது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. அலகின் வடிவம், உடலின் நிறம் என எவ்வித அடையாளங்களையும் கருத்தில் கொள்ளாமல் தலையும் கழுத்தும் வெள்ளை நிறத்தில் இருந்ததால் செம்பருந்துக்கு (Brahminy Kite), வெண்தலைக் கழுகு (Bald Eagle) எனப் பெயர் சூட்டியதைப் போலப் பெரிய வேடிக்கை வேறு என்னவாக இருக்க முடியும்?

பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள் Read More »

Do you know which your District Bird is?

This is the English version of the article published in the leading Tamil news daily ‘The Hindu’ in ‘Uyir Moochu’ (meaning life breath) on December 16, 2017. Ganeshwar SV

It is a well-known fact that all around the world several young people today are affected by stress and depression. Recent research has shown that bird watching can improve mental health. True, it is my saviour during tough times in life. It is a indeed a welcome sign that in India bird watching has started to emerge as one of the popular hobbies especially among the younger generation; a colourful and melodious hobby with full of fun!

When you are watching a bird, you can also hear many more calls and songs of other species too. Your eyes will see just one bird but ears will ‘see’ many birds. Isn’t that cool? The more you watch, the more you will enjoy and develop this eye-ear coordination skill which increases our powers of observation. Our Indian Ornithology has a glorious history, thanks to stalwarts like Hume, Jerdon, Hodgson, Blyth, Salim Ali and many other legends. Yet we don’t know a lot about our common birds and there are plenty of gaps in our knowledge and understanding. This opens up several opportunities for children to take this as a profession (or as a hobby) especially if they are interested in bird research.

Salim Ali by MNS
‘Bird Man of India’ Sálim Ali. Photography by V. Santharam/Madras Naturalists Society

Even before the questions like ‘Which is the largest bird in the world?’ Which bird lives in Antarctica?’ end, a child answers (Ostrich, Penguin) within no time. Those are birds which he may never see in his entire life unless he travels for Big Year. On the other hand, we don’t even know the names of our common birds. We must ask ourselves if we can name at least 10 tree species and 10 bird species around us. Of course, many of us can’t. So what’s the big deal in not knowing them? Let us understand that this is one of the many crucial points where our connection with Nature starts to get thinner. As we grow up into adults, some lose this connection totally. When I don’t even know what is around my home, how will I know their importance or try to understand their problems or how will I think about doing something to save them? Without collective participation, nothing is possible. So if we want people to realize the importance of local wildlife, we should show the importance and impacts in live!

THE CONCEPT OF DISTRICT BIRD

Similar to the national bird and state bird, wouldn’t it be really wonderful to have a district bird too? India has 641 districts (many more might be carved out in the future). India ranks No. 8 in the world in terms of bird diversity with more than 1200 species! According to my understanding, the Peacock could have been chosen as the national bird owing to its wide distribution, beauty, grace, elegance and also it features in our folklore and mythology. It is indeed a pride to have it as our national bird.

Correspondingly let us have a bird for our districts too. Let us take Tamil Nadu for example. Laughingthrushes won’t be present in coastal districts. Similarly, a species from coastal region will not occur in the Ghats. We have 32 districts in Tamil Nadu which means we have an excellent opportunity to introduce 32 different species which can fascinate our kids and make them realize the importance of the bird life around them. I am hopeful that this concept will be a good option to promote birding on a larger scale. It will evoke a curiosity among kids to see their district bird and that might be the opening for many to take up birding. This is not only about birds but it can also improve the lives of many children. Executing this idea and reaping the results may not be immediate but I am very positive that it is bound to create a good impact on children.

EMDO மெல்வின்
EMERALD DOVE, the State Bird of Tamil Nadu. Photograph by Melvin Jaison

THE DISTRICT BIRD OF SALEM

Salem has bird diversity of more than 300 species. After analysing all previous published records as well as my observations from Salem, I have penned down few criteria based on which the district bird could be selected.

  1. The bird should be well distributed within the district boundaries.
  2. It should be easily seen OR easily recognizable to common man.
  3. It should be a flagship species to promote bird watching in the district.
  4. It should have conservation significance (threatened or endemic).
  5. It should feature in the mythology, folklore and traditions of the district. It should symbolise either beauty, power, endurance, adaptability, etc.,

Based on the above criteria, I propose ORIENTAL DARTER Anhinga melanogaster as the District Bird of Salem!

Why don’t we choose Crow, Myna, Parakeet or a Drongo? Well, there’s nothing wrong in choosing them. Emerald Dove (state bird of Tamil Nadu) has a good distribution and population. There are no immediate signs of decline. However, I don’t think any birder knows why it was chosen as our state bird. Ten years from today, when a little kid starts birding and asks, ‘Parakeets are present everywhere, so why was it chosen as a district bird?’ On the other hand, if we choose a bird which is endemic, threatened or even a common species which is showing signs of population decline, we can get the attention and participation from a wider audience.

‘Near Threatened’ DARTER

The Oriental Darter is a water bird. It almost exclusively feeds on fish. While it hunts, the head and neck alone is visible above the water surface, giving a snake like appearance and hence the name Snake Bird! IUCN has classified Darter under ‘Near Threatened’ category. The population is in decline and in future it may be pushed into the threatened category. Do we really want that to happen? No! The shape of the neck resembles the letter ‘S’ and it would be apt for Salem.

1 Darter by Samyak Kaninde
Representational image–ORIENTAL DARTER. Photograph by Samyak Kaninde

Birders can come together to discuss and choose/propose their district bird. It can also be discussed in the annual Tamil Birders Meet. Several organizations and groups can take it to different regions of the country.

If you are a birder reading this, do try something similar or even better than this to have a District Bird for your own district and please let me know through mail: enviroganeshwar@gmail.com.

As I am a birder, I have come up with this concept using birds as an example. Similarly, we can also have District Butterfly, Dragonfly, and Plants and so on. I am sure it will have a positive impact especially among children. Let us learn, appreciate and cherish all the local wildlife around us, not only for their sake but also to secure our own future!

Do you know which your District Bird is? Read More »

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?

டிசம்பர் 16, 2017 அன்று ‘தி இந்து’ நாளிதழின் உயிர் மூச்சுப் பகுதியில் வெளியானக் கட்டுரையின் முழு வடிவம்.

சு.வே. கணேஷ்வர்.

இன்று பல மாணவர்கள், இளைஞர்கள் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்படுவது  அனைவரும் அறிந்ததே. அண்மையில் வெளிவந்த ஆய்வு ஒன்றில் பறவை நோக்குதலால் மன ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, இளைஞர்களிடையே பிரபலமான பொழுதுபோக்கு அம்சங்களுள் ஒன்றாக பறவை நோக்குதலும் இடம்பெறத் தொடங்கி உள்ளது. மன ஆரோக்கியம் வாழ்கையின் முக்கிய அம்சம் என்பதால் நம்முடைய பல பொழுதுபோக்குகளில் இயற்கை சார்ந்த ஒரு செயல்பாட்டை வைத்திருப்பது மிகவும் நல்லது.

ஹியூம் (இந்தியப் பறவையியலின் தந்தை), ஜெர்டான், ஹாட்ஜ்சன், பிளைத், சாலிம் அலி (இந்தியாவின் பறவை மனிதர்) போன்ற மகோன்னதமான பறவையியல் மேதைகளால் இன்று இந்தியப் பறவையியல் (Indian Ornithology) மகத்துவம் பெற்று விளங்குகிறது. இருப்பினும் நம்மைச் சுற்றியுள்ள பல பொதுப்பறவைகளைப் பற்றியே முழுமையாகத் தெரியாது. மேலும் நம்முடைய புரிதலிலும் பல வெற்றிடங்கள் உள்ளன. இதை நிரப்ப பல ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளும் மாணவர்களுக்காக காத்திருக்கின்றன.

Salim Ali by MNS
‘இந்தியாவின் பறவை மனிதர்’ சாலிம் அலி படம்: வி. சாந்தாராம்/MNS

அண்டார்டிகாவில் உள்ள பறவை என்ன அல்லது உலகின் மிகப் பெரிய பறவை எது என்று கேள்வியை முடிக்கும் முன்னரே, “பெங்குவின் மற்றும் ஆஸ்ட்ரிச்!” என்று நொடிப்பொழுதில் பதிலளிக்கும் குழந்தைகளால் ஏன் வீட்டிற்கு தினமும் வந்து செல்லும் சில பறவைகளின் பெயர்கள் தெரிவதில்லை? குழந்தைகள் படுசுட்டியான திறமைசாலிகள். எதையும் எளிதில் உள்வாங்கக் கூடியவர்கள். ஒரு வினாடி வினா போட்டிக்கு உலகில் பெரியது, சிறியது, நீண்டது, உயர்ந்தது என பல விஷயங்களை சொல்லித்தருகிறோம். அது போலவே நம் இந்தியாவில் உள்ள வளங்களின் பெருமைகளைக் கற்றுத்தர வேண்டும்.

ஒரு பெற்றோரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்த போது “என் பையன் கிளாஸ்ல அஞ்சு ரேங்க்குள்ள வரான். பின்ன எதுக்கு சார் இதெல்லாம் சும்மா. நாலு காசு வருமா இதுல” என்றார். அவர் மட்டுமல்ல இன்று பெரும்பாலான பெற்றோர்களின் மனநிலையும் இது போல் தான் உள்ளது.

இந்தப் புள்ளியில் தான் குழந்தைகளுக்கும் இயற்கைக்குமான தொடர்பு வலுவிழக்கத் துவங்குகிறது. வளர்ந்த பின் பலருக்கு இந்தத் தொடர்பு முற்றிலும் அறுந்துவிடுகிறது. இந்தக் காரணத்தால் தான் நம் கண் முன் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தெரிந்தாலும் நமக்கும் அதற்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது போல் சர்வசாதாரணமாகக் கடந்து விடுகிறோம். பின் அதன் பொருட்டு ஏற்படும் இன்னல்களுக்கு பிறரை குறை கூறத்துவங்குகிறோம்.

எனவே நம் வீட்டைச் சுற்றியுள்ள வளங்களின் முக்கியத்துவமும் பெருமையும் தெரியவில்லை என்றால் பின் எவ்வாறு அவை சந்திக்கும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவற்றை பாதுகாக்க நம்மால் யோசிக்க முடியும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல அனைவரின்  கூட்டு முயற்சியால் மட்டுமே இயற்கைப் பாதுகாப்பு சாத்தியமாகும்.

மாவட்டப் பறவை

இயற்கைக்கும் குழந்தைகளுக்குமான தொடர்பை வலுப்படுத்துவதில் பறவைகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. எடுத்துக்காட்டாக, உயிரியல் பூங்காக்களில் உள்ள மயில் கூண்டுகளை நோக்கி குழந்தைகள் ஆர்ப்பரிப்போடு ஓடிச்சென்று அதன் அழகை எவ்வளவு ரசிக்கின்றனர் என்பதை எவரால் மறக்க இயலும்? இந்தியாவிற்கு மயில் போல தமிழ்நாட்டிற்கு மரகதப் புறா (Emerald Dove) போல நம் மாவட்டத்திற்கென ஒரு பறவை அமைய வேண்டும். அப்படி அமைந்தால் குழந்தைகளுக்கும் பறவைகளுக்குமான நெருக்கத்தை அதிகரிக்க இது உதவும். தமிழ்நாட்டில் இது வரை அதிகாரப்பூர்வமாக 530 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நம் மாநிலத்தில் 32 மாவட்டங்கள் உள்ளன. எனில் 32 புதிய பறவைகளை குழந்தைகளிடம் அறிமுகம் செய்யும் அற்புதமான வாய்ப்பு நம்மிடையே உள்ளது. இப்படிச்செய்தால் அங்கு வாழும் மக்களுக்கும் தினசரி வாழ்வில் பறவைகளின் முக்கியத்துவம் புரியத் துவங்கும். பறவைப் பார்த்தலும் பறவைகளின் பாதுகாப்பும் தன்னால் நிகழும்.

EMDO மெல்வின்
மரகதப்புறா. படம்: மெல்வின் ஜெய்சன்

எப்படித் தேர்வு செய்வது? 

சரி, ஒரு மாவட்டத்திற்கான பறவையை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது?

மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பார்க்கக்கூடிய ஒன்றாக அந்தப் பறவை இருக்க வேண்டும். எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஓரிடவாழ்வியாக, அழியும் நிலையில் உள்ள பறவைகளாக இருந்தால் இன்னும் சிறப்பு.

சேலத்தின் மாவட்டப் பறவை

மேற்கண்டவற்றின் அடிப்படையில் சேலம் மாவட்டத்துக்கான ஒரு பறவையாக, நாங்கள் ஒன்றைத் தேர்வு செய்துள்ளோம். இது வரை சேலத்தில் 300க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்துப் பறவை இனங்களையும் ஆராய்ந்த பிறகு சேலத்தின் மாவட்டப் பறவையாக நாம் பாம்புத்தாராவைப் (Oriental Darter) பரிந்துரைக்கலாம்.

ஏன் காகத்தையோ மைனாவையோ கிளியையோ அல்லது கரிச்சானையோ தேர்ந்தெடுக்கவில்லை? தேர்ந்தெடுக்கலாம். அதில் தவறேதுமில்லை.

மரகதப் புறா அனைத்து இடங்களிலும் நல்ல எண்ணிகையில் பரவி உள்ளது. இப்போதைக்கு அது அழிவின் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை. அது ஏன் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக உள்ளது என்று யாருக்காவது தெரியுமா எனத் தெரியவில்லை.

இன்றிலிருந்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து வரும் இளம் பறவை ஆர்வலருக்கு கிளியோ காகமோ தான் அனைத்து இடங்களிலும் உள்ளதே பின் இது ஏன் தேர்வு செய்யப்பட்டது என்று எண்ண வாய்ப்புண்டு. மாறாக அழிவை நோக்கி இருக்கும் ஒரு பறவையைத் தேர்வு செய்வதன் வாயிலாக அனைவரின் கவனத்தையும் பங்களிப்பையும் பெற இயலும்.

1 Darter by Samyak Kaninde
பாம்புத்தாரா ORIENTAL DARTER படம்: சம்யக் கணின்டே

குறைந்துவரும் பாம்புத்தாரா

பாம்புத்தாரா ஒரு நீர்ப்பறவை. பெரும்பாலும் மீன்களையே உண்ணும். வேட்டையாடும் போது கழுத்து மட்டும் பாம்பு போல நீருக்கு மேல் தெரியும். அதனாலேயே இப்பெயர் பெற்றது. சர்வதேச இயற்கைப் பாதுகாப்புக் கழகம் (International Union for Conservation of Nature & Natural Resources) இப்பறவையை ‘அழிவு நிலைக்கு நெருக்கமாக உள்ள’ (Near Threatened) பறவை என அறிவித்திருக்கிறது. தற்போது பாம்புத்தாராவின் எண்ணிக்கை குறைந்து வருவதால் விரைவில் அழிவின் பாதைக்கு தள்ளப்படலாம் என்று யூகிக்க முடிகிறது. சேலத்தின் பெரும்பாலான நீர்நிலைகளில் இப்பறவையைக் காண இயலும். மேலும் இதன் கழுத்து “S” வடிவத்தில் இருப்பதால் சேலத்திற்குப் பொருத்தமான ஒன்றாகவும் இருக்கும்.

இது போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனைத்துப் பறவை ஆர்வலர்களும் ஆலோசித்து ஒரு பறவையைத் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யலாம். ஆண்டுதோறும் நடைபெறும் தமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பிலும் இது பற்றி ஆலோசிக்கலாம். பிற குழுக்களுடன் இணைந்து தேசிய அளவிலும் இதை செயல்படுத்தலாம்.

இது போன்ற முயற்சிகள் இயற்கையின் மீதான நம் ஆர்வத்தை அதிகரிக்கும். மனித குலத்தின் வளமான எதிர்காலத்திற்கு இயற்கை வளம் இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்து, இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும்!

உங்கள் மாவட்டத்தின் பறவை எது? Read More »

சிறகு – இதழ் 3 (ஜூலை–செப்டம்பர் 2017)

தமிழில்: தி. அருள்வேலன்

தலையங்கம்

“தென்மேற்குப் பருவமழையுடன் இயைந்த இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டு, பறவை ஆர்வலர்களுக்கு விறுவிறுப்பான பருவமாக அமைந்தது. குறிப்பிடத்தக்க சில புதிய சாதனைகள், மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டங்கள், பறவைகளுக்கென ஒரு புதிய கழகம் என இன்னும் பல. வலசைப்பறவைகளில் சிலவும் வந்து விட்டன. பறவை ஆர்வலர்களுக்கு கொண்டாட்டமான பருவம் தொடங்க வாழ்த்துக்கள்! eBird வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட பறவை சார்ந்த தகவல்கள் மட்டுமே இந்த இதழில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இவ்விதழ் DARTER என்ற பெயரில் வெளியாகிறது.” –சு.வே.கணேஷ்வர்.

மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டங்கள்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டாரவள ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையை ஒன்றிய அளவில் இரண்டு கட்டங்களாக ஜூலை 10-14 மற்றும் 24-28 நடத்தியது. இப்பட்டறையில் நமது சேலம் பறவையியல் கழகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஆசிரியர்களுக்கு, பறவைகள் பார்த்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் 42 அமர்வுகள் நடத்தினர். இவ்வமர்வின் வழி நமது கழகத்தின் ஆறு கருத்தாளர்கள் 4,206 ஆசிரியர்களுக்கு பறவைகள் பற்றிய விழிப்புணர்வை கொண்டு சேர்த்தனர். அதன் விவரங்கள் விவரங்கள் பின்வருமாறு:

 

எண்

 

ஒன்றியம்

 

கருத்தாளர் பெயர்

 

தேதி

2017

முதல் கட்டம் I இரண்டாம் கட்டம் II

 

1 காடையம்பட்டி தமிழ்ச்செல்வன் ஜூலை

13 & 25

140

136

2

ஏற்காடு தமிழ்ச்செல்வன் ஜூலை

14 & 27

48 47
3 அயோத்தியாபட்டணம் இளவரசன் ஜூலை

11 & 27

90

90

4

வாழப்பாடி இளவரசன் , கலைச்செல்வன் ஜூலை

12 & 26

90 100
5 பெத்தநாயக்கன்பாளையம் இராஜாங்கம் ஜூலை

12 & 26

82

99

6

ஆத்தூர் இராஜாங்கம் ஜூலை

14 & 27

99 99
7 தலைவாசல் கலைச்செல்வன், இராஜாங்கம் ஜூலை

13 & 27

76

96

8

கங்கவல்லி கலைச்செல்வன் ஜூலை

13 & 27

66 75

9

ஓமலூர் செந்தில்குமார் ஜூலை

10 & 24

101

163

10 மேச்சேரி செந்தில்குமார் ஜூலை

10 & 25

91

109

11

நங்கவல்லி செந்தில்குமார் ஜூலை

11 & 25

113 117
12 கொங்கணாபுரம் செந்தில்குமார் ஜூலை

12 & 26

66

23

13

மகுடஞ்சாவடி செந்தில்குமார் ஜூலை

12 & 26

71 74
14 கொளத்தூர் செந்தில்குமார் ஜூலை

13 & 27

101

96

15

எடப்பாடி செந்தில்குமார் ஜூலை

14 & 28

93 100
16 சேலம் நகர்ப்புறம் கணேஷ்வர் ஜூலை

10 & 24

184

224

17

சேலம் கிராமப்புறம் கணேஷ்வர் ஜூலை

10 & 25

134 138
18 பனமரத்துப்பட்டி கணேஷ்வர் ஜூலை

11 & 26

83

90

19

வீரபாண்டி கணேஷ்வர் ஜூலை

11 & 26

106 110
20 சங்ககிரி கணேஷ்வர் ஜூலை

13 & 28

81

95

21

தாரமங்கலம் கணேஷ்வர், இளவரசன் ஜூலை

13 & 28

113

97

ஆசிரியர்களின் எண்ணிக்கை

பட்டறை 1 & 2

 

2028

 

 

2178

 

மொத்தம்

4206

1 SSA - Copy
கருத்தாளரின் பேச்சை கவனமாகக் கேட்கும் ஆர்வமிக்க ஆசிரியர்கள்

இரண்டு அரிய பதிவுகள்

  1. 1929ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்காட்டில் செதில் வயிற்று மரங்கொத்தியை STREAK-THROATED WOODPECKER தணிகைவேலு முதல் புகைப்படத்துடன் ஆகஸ்ட் 12, 2017 அன்று பதிவு செய்துள்ளார். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

    STW by Thanigai Velu
    A female STREAK-THROATED WOODPECKER photographed by Dr. Thanigai Velu
  2. செப்டம்பர் 17, 2017, அன்று வெங்கட்ராமன் இராஜமாணிக்கம் பழுப்பு காட்டு ஆந்தையை BROWN WOOD OWL ஏற்காட்டில் கண்டு புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த ஆந்தை சேலத்தில் இரண்டாவது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நம் மாவட்டத்தில் இதுவே அதன் முதல் ஒளிப்படமாகும். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

    BWO by Venkatraman
    பழுப்பு காட்டு ஆந்தை. ஒளிப்படம்: வெங்கட்ராமன் இராஜமாணிக்கம்

குறிப்பிடத்தக்க பதிவு

செப்டம்பர் 26, 2017, அன்று பிரவீன் மணிவண்ணன், ஏற்காட்டில் 10 மலை உழவாரன்களைக் ALPINE SWIFT கண்டு பதிவு செய்துள்ளார். பத்துப் பறவைகளை ஒன்றாகப் பார்த்தது குறிப்பிடத்தக்கப் பதிவாகும். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வலசைப்பறவைகளின் முதல் வருகை (2017-18ம் ஆண்டிற்கான வலசை காலத்திற்கு)

எண்.

பொதுப்பெயர் பறவை ஆர்வலர் முதல் வருகை  2017-18
1 சாம்பல் வாலாட்டி

Grey Wagtail

 

முருகேஷ் நடேசன்

செப்டம்பர் 2

2

பொரி உள்ளான்

Wood Sandpiper

முருகேஷ் நடேசன்

செப்டம்பர்  7

3

மண்கொத்தி உள்ளான் Common Sandpiper கோகுல் வடிவேல் செப்டம்பர்  14
4 தகைவிலான் Barn Swallow இளவரசன்

செப்டம்பர்  17

5

மீசை ஆலா  Whiskered Tern இளவரசன் செப்டம்பர்  23
6, 7 பச்சைக் கதிர்க்குருவி

Green Warbler & Greenish Warbler

 தணிகைவேலு

செப்டம்பர்  29

8

புஞ்சைக் கழுகு  Booted Eagle கோகுல் வடிவேல் செப்டம்பர்  29
9 ஆற்று உள்ளான்

Green Sandpiper

கோகுல் வடிவேல்

செப்டம்பர்  29

சேலம் பறவையியல் கழகம் துவக்க விழா

வரலாற்றுச் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த நிகழ்வாக சேலம் பறவையியல் கழகத்தின் துவக்க விழா செப்டம்பர் 30, 2017 அன்று சேலம் உருக்காலை சமுதாயக்கூடத்தில் நடை பெற்றது. இக்கழகம் பறவைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான முதல் மற்றும் தனித்துவமான அமைப்பாகும். மேலும் விவரங்களுக்கு: www.salembirds.wordpress.com

தி. ஜெயமுருகன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் விழாவினை சிறப்பாக தொகுத்தளித்தார். அவர் பறவைகளின் மேல் கொண்ட பற்றின் காரணமாக தானே பாட்டெழுதி, அதை இசையமைத்து, ஒரே பாடலில் 24 பறவைகளைப் பற்றிப் பாடினார். ர.கி. லால், அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். ப. சஹஸ்ரநாமம் விழாவிற்கு தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். விழாவின் சிறப்பு நிகழ்வாக கிருஷ்ணம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தொகுத்து வழங்கிய பறவைகள் பாதுகாப்பு மற்றும் பங்களிப்பு பற்றிய அருமையான குறுநாடகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

3 SOF inauguration
மனிதனின்றி பறவைகள் வாழும் ஆனால் பறவைகளின்றி மனிதனால் வாழ முடியாது என்னும் குறுநாடகத்தில் மாணவர்கள். ஒளிப்படம்: வெங்கட்ராமன் இராஜமாணிக்கம்

சு.வே. கணேஷ்வர் கழகத்தின் தலையாய நோக்கங்களையும் குறிக்கோள்களையும் எடுத்துரைத்தார். அதில் குறிப்பாக பார்வையற்றோருக்கும், காது கேளாதோருக்கும், திருநங்கைகளுக்கும் இயற்கையின் விந்தைகளை பறவைகளின் வாயிலாக உணர்ந்து மகிழும் வண்ணம் செயல்பாடுகள் அமையும் என்று தெரிவித்தார்.

சூழலியல் எழுத்தாளரும், காட்டுயிர் பாதுகாப்பு முன்னோடியுமான சு. தியடோர் பாஸ்கரன் அவர்களின் முதன்மையுரை விழாவின் மணிமகுடமாக அமைந்தது. இயற்கையும் சுழலும் அறிவியலும் எவ்வாறு அனைத்து உயிர்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்பதை அனைவர்க்கும் விளங்குமாறு திறம்பட எடுத்துரைத்தார். கால்நடை மருத்துவர் ம. ரவி நன்றியுரையாற்றினார்.

6 SOF inauguration
காட்டுயிர் பற்றிய பல பரிமாணங்களை விழாவில் சிறப்புரையாக ஆற்றும் மதிப்பிற்குரிய சு. தியடோர் பாஸ்கரன்

விழா நடந்த சமுதாயக்கூடத்தில் காலை முதல் மாலை வரை பறவைகள் பற்றிய கண்கவர் ஒளிப்படக் கண்காட்சி இடம்பெற்றது மிகப்பொருத்தமாக இருந்தது. இக்கண்காட்சியில் பாறும் ஊரும் புகழ் அருளகம் பாரதிதாசன், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் சொ.சுப்ரமணியன், ஆசிரியர் மற்றும் பறவை ஆர்வலர் கலைச்செல்வன், வெங்கட்ராமன் இராஜமாணிக்கம் மற்றும் சொ. சுப்ரமணிய சிவா ஆகியோரது ஒளிப்பட வங்கியிலிருந்து பெறப்பட்ட உயிரோட்டமுள்ள ஒளிப்படங்கள் இடம்பெற்றன.

Photo Exhibition
விழா அரங்கில் கண்கவர் ஒளிப்படங்கள் 

பறவை ஆர்வலர்கள் அருகிலுள்ள நேரு பூங்காவில் “பறவை நோக்குதலில்” கலந்து கொண்டு பறவைகளை அடையாளம் காணுதல், பறவை நோக்குதலின் முக்கியத்துவம் போன்ற பல தகவல்களைக் கற்றுக்கொண்டு பலனடைந்தனர். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

SOF Inaugural Ceremony Bird Walk
பறவை நோக்குதலில் பங்கு கொண்ட ஆர்வலர்கள். ஒளிப்படம்: சுரேந்தர் பூபாலன்

சிறகு – இதழ் 3 (ஜூலை–செப்டம்பர் 2017) Read More »

சிறகு – இதழ் 2 (ஏப்ரல்-ஜூன் 2017)

தமிழில்: தி. அருள்வேலன்

தலையங்கம்

“நமது சிறகு செய்தி மடலின் முதல் காலாண்டு இதழானது விஞ்ஞானிகள், மூத்தப் பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை விரும்பிகள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதரவும் ஆலோசனையும் வழங்கிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.  ஏறக்குறைய அனைத்து வலசை பறவைகளும் அவற்றின் இனப்பெருக்க இடங்களுக்கு திரும்பி விட்டாலும் நமது பறவை ஆர்வலர்களின் தணியாத பறவைத்தாகம் கோடையின் வெப்பத்தையும் மிஞ்சியது. அதுமட்டுமல்ல பல புதிய பதிவுகளுக்கும் வித்திட்டது. முதல் முறையாக, இத்தகு ஆர்வம், வலசை திரும்பாத சில பறவைகளை நாம் படிப்பதற்கும் உதவியாக இருந்துள்ளது. eBird வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட பறவை சார்ந்த தகவல்கள் மட்டுமே இந்த இதழில் பயன் படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இவ்விதழ் DARTER என்று வெளியாகிறது” – சு.வே. கணேஷ்வர்.

இரண்டாவது பதிவு (1)

சேலம் மாவட்டத்தில் காண்பதற்கு அரிய பூமன் ஆந்தையை BROWN FISH OWL 1929ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் 14, 2017 அன்று கோகுல் வடிவேல் மற்றும் தணிகைவேலு (இருவரும்) மீண்டும் கப்புத்தியில் கண்டு சாதனை படைத்தனர். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

1 BFO
பூமன் ஆந்தை. ஒளிப்படம்: கோகுல் வடிவேல்

சங்குவளை நாரை மற்றும் பிற நீர்ப்பறவை கூட்டங்கள்

250க்கும் மேற்பட்ட சங்குவளை நாரைகள் மற்றும் வெண்கழுத்து நாரை, கூழைக்கடா, உள்ளான் இன்னும் பிற நீர்ப்பறவைக் கூட்டங்களை கலைச்செல்வன் பதிவு செய்துள்ளார். அது பற்றிய செய்திகள் ஏப்ரல் 25 தினமணி, காலைக்கதிர் நாளிதழ்களிலும் ஏப்ரல் 26 தினமணி, தினகரன் நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டது. முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

PAST flight
சங்குவளை நாரைகள் மற்றும் பிற நீர்ப்பறவைகள்.  ஒளிப்படம்: கலைச்செல்வன்

புதிய பதிவு (1)

கோகுல் வடிவேல் சேலம் வடமநேரி ஏரியில் மே 1, 2017 அன்று, முதல் முறையாக செவ்வால் வானம்பாடியை RUFOUS-TAILED LARK கண்டு பதிவு செய்தார். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

ஓரிடவாழ் பறவைகள் நாள் மற்றும் புதிய பதிவு (2)

மே 13, 2017 அன்று சேலத்தில் மூன்றாம் ஓரிடவாழ் பறவைகள் நாள் ENDEMIC BIRD DAY கொண்டாடப்பட்டது. உள்ளூர் பறவைகள் உட்பட மொத்தம் 106 பறவையினங்கள் கணக்கெடுக்கப்பட்டது. பறவை ஆர்வலர்கள் கோகுல் வடிவேல், முருகேஷ் நடேஷன், தணிகைவேலு, ரமேஷ்குமார், கார்த்திகேயன், அருள்வேலன் மற்றும் கணேஷ்வர் பங்கு பெற்றனர். அவர்கள் புது ஏரி, கன்னங்குறிச்சி மூக்கனேரி மற்றும் சேர்வராயன் மலையின் பல பகுதிகளில் பறவைகளைக் கண்டனர். சேலத்தில் முதல் முறையாக கப்புத்திப் பகுதியில் கரிச்சான் குயிலைக் FORK-TAILED DRONGO-CUCKOO கண்டு பதிவு செய்தனர். ஆசிரியர் இராஜாங்கம் மற்றும் மாணவர்கள் ஆத்தூர் தாலுகாவிலும், சுப்ரமணிய சிவா ஓமலூர் தாலுகாவிலும் கணக்கெடுப்பு நடத்தினர்.

செய்தித்தாள்களில் கொம்பன் ஆந்தை

கொம்பன் ஆந்தை INDIAN EAGLE OWL பரவலாகக் காணப்பட்டாலும் அதைப்பற்றிய சில முக்கியத் தகவல்களை கலைச்செல்வன் நேர்பட முன்னெடுத்தார். அவ்வாந்தை பற்றிய முறையான செய்திகள் காலைக்கதிர், தினமணி, தினகரன், தினமலர் நாளேடுகளில் மே 19, 2017 அன்று வெளியிடப்பட்டது.

இரண்டாம் பதிவு (2)

சேலம் மாவட்டத்தில் 2014ம் ஆண்டு முதல்முறையாக பெரிய பூநாரை பதிவு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மே 23, 2017  அன்று சுப்ரமணிய சிவா மேட்டூர் தாலுகாவில் உள்ள பன்னவாடி அருகே பெரிய பூநாரையை GREATER FLAMINGO மீண்டும் கண்டு சாதனை படைத்தார். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

அகில இந்தியத் தூக்கணாங்குருவிகள் கணக்கெடுப்பு

பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் Bombay Natural History Society இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தூக்கணாங்குருவி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இவ்வாண்டு ஜூன் 4 – 10 தேதிகளில் கணக்கெடுப்பு நடைபெற்றது.  ஆத்தூர் தாலுகாவில் இராஜாங்கமும் அவரது மாணவர்களும் தளவாய்பட்டி ஏரி, ஒட்டப்பட்டி மற்றும் அரியபாளையம் பகுதிகளில் 59 ஆண் மற்றும் 89 பெண் உள்ளிட்ட 148 தூக்கணாங்குருவிகளைப் பதிவு செய்தனர். அவர்கள் 42 முழுமையான மற்றும் 105 முழுமையற்ற கூடுகளையும் கணக்கிட்டனர்.

2 BAWE
பனை மரத்தில் தொங்கும் தூக்கணாங்குருவி கூடுகள். ஒளிப்படம்: இராஜாங்கம்

புதிய பதிவு (3)

கோகுல் வடிவேல் சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக வெண்கழுத்துப் பட்டாணிக்குருவியை WHITE-NAPED TIT ஜூன் 1, 2017 அன்று கண்டு பதிவு செய்தார். இது குறிப்பிடத்தக்க மற்றும் எதிர்பாராத ஒன்றாகும். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

3 WWT
வெண்கழுத்துப் பட்டாணிக்குருவி. ஒளிப்படம்: கோகுல் வடிவேல்

பிற முக்கியப் பதிவுகள்

முருகேஷ் நடேசன் மற்றும் தணிகைவேலு ஜூன் 6, 2017 அன்று கப்புத்திப் பகுதியில் செவ்வயிற்றுக் கழுகைக் RUFOUS-BELLIED EAGLE கண்டு பதிவிட்டனர்.  முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

முருகேஷ் நடேசன் ஜூன் 18, 2017 அன்று வடபட்டி பகுதியில் வர்ண சுண்டங்கோழியை PAINTED SPURFOWL அதன் மூன்று குஞ்சுகளுடன் கண்டு பதிவிட்டார். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.

4 PASP
Photograph of PAINTED SPURFOWL male by Murugesh Natesan

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வலசைப்பறவைகள்

கோடைக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட சில வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வலசைப்பறவைகளின் விவரங்கள். வலசைப் பறவைகள் எதுவும் இங்கு இனப்பெருக்கம் செய்யாது. முழுப்பட்டியலை காண தேதியை சொடுக்கவும்.

 

வ.எண்

 

 பறவையின் பெயர்

 

 ஆர்வலர் பெயர்

2016-17 வலசைக் காலத்தில் கடைசிப் பதிவு

1

செவ்வால் மைனா Chestnut-tailed Starling ம. இளவரசன்

1 April

2

சோளக்குருவி Rosy Starling முருகேஷ் நடேசன் 3 April
3 நீலச்சிறகி Garganey முருகேஷ் நடேசன்

3 April

4

நீலத்தலை பூங்குருவி Blue-capped Rock Thrush முருகேஷ் நடேசன் 5 April
5 Sykes’s Warbler முருகேஷ் நடேசன்

5 April

6

செவ்வால் ஈப்பிடிப்பான் Rusty-tailed Flycatcher தணிகைவேலு 6 April
7 பெயிலான் கானாங்கோழி Baillon’s Crake ம. இளவரசன்

14 April

8

பெரிய நாணல் கதிர்க்குருவி ம. இளவரசன் 14 April
9 பழுப்புத்தலை கடற்காகம் கலைச்செல்வன்

16 April

10

சாம்பல் வாலாட்டி Grey Wagtail ம. இளவரசன் 18 April
11 Booted Warbler தணிகைவேலு

26 April

12

பழுப்புக் கீச்சான் Brown Shrike முருகேஷ் நடேசன்

27 April

13

சாம்பல் கரிச்சான் Ashy Drongo முருகேஷ் நடேசன்

28 April

 

14

ஆறுமணிக்குருவி Indian Pitta முருகேஷ் நடேசன்

29 April

15

பச்சைக் கதிர்க்குருவி Green Warbler தணிகைவேலு

30 April

16

சிவப்பு வல்லூறு Eurasian Kestrel கோகுல் வடிவேல்

30 April

17

பிளைத் நாணல் கதிர்க்குருவி Blyth’s Reed Warbler முருகேஷ் நடேசன்

1 May

18

ஆற்று உள்ளான் Green Sandpiper கோகுல் வடிவேல் 1 May
19 Greenish Warbler சு.வே. கணேஷ்வர்

13 May

20

மண்கொத்தி உள்ளான் Common Sandpiper கோகுல் வடிவேல் 15 May
21 பொரி உள்ளான் Wood Sandpiper அனுனிதா KP

18 May

22

தகைவிலான் Barn Swallow முருகேஷ் நடேசன் 23 May
23 மீசை ஆலா Whiskered Tern சுப்ரமணிய சிவா

23 May

24

பெரிய பூநாரை Greater Flamingo சுப்ரமணிய சிவா 23 May
25 மஞ்சள் வாலாட்டி Western Yellow Wagtail சுப்ரமணிய சிவா

30 May

5 b BHGU
வலசை வந்த பழுப்புத்தலை கடற்காகங்கள். ஒளிப்படம்: கலைச்செல்வன்

பொதுவுலகத்தொடர்பு

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாவட்ட அளவிலான வட்டார வள ஆசிரியர்கள் பயிற்சிப்பட்டறை ஒன்று ஜூன் 15, 2017 அன்று சேலம் AVS பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சு.வே. கணேஷ்வர் பட்டறையில் கலந்து கொண்ட  117  ஆசிரியர்களுக்கு பறவைகளின் சிறப்பு பற்றி கலந்தாய்வு மூலம் எடுத்துரைத்தார்.  மேலும், பிற பறவைக் கருத்தாளர்கள் இது போன்ற பட்டறைகள் மூலம் 15 மாவட்டங்களில்  1951 ஆசிரியர்களுடன் கலந்துரையாடி பறவை காணும் ஆர்வத்தை வளர்த்தெடுத்தனர்.

6 Outreach June
அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர்கள் பயிற்சிப்பட்டறையில் கணேஷ்வர் உரையாற்றுகிறார். ஒளிப்படம்: தமிழ்ச்செல்வன்

மாணவர்ப் பகுதி

“துளிர் அறிவியல் திருவிழாவில் கலந்து கொண்ட அந்நாள் மறக்க முடியாதது. பல அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது பறவைகள் பார்த்தல் பற்றியது. அவ்வமர்வு என்னை ஊக்கப்படுத்தியது, வாழ்க்கையின் வேறு கோணத்தை காண உதவியது. அன்றிலிருந்து பறவைகள் பற்றிய செய்திகள் சேகரிக்கவும் வித விதமான பறவைகளை பார்க்கவும், நேசிக்கவும் மனம் விழைந்தது. அதனைத்தொடர்ந்து எனது பேராவல் காரணமாக கோடை விடுமுறையை பறவைகளை நேரில் கண்டும் பறவைகள் பற்றிய உருவங்கள் உண்டாக்கும் காகித கலையில் ஈடுபட்டும் மகிழ்ந்தேன், நிறைவடைந்தேன். இயற்கை சூழலையும், பறவைகளையும் பாதுகாப்பது நமது கடமையாகும்”. செ.சுப்ரமணிய சிவா, ஒன்பதாம் வகுப்பு மாணவர்.

7
மாணவர் சுப்ரமணிய சிவாவின் காகித கலையில் பறவைகள்

வாராந்திரப் பறவை நோக்குதல் திட்டம்

ஆத்தூர் தாலுகா தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் இராஜாங்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வகுப்பு முடிந்த பிறகு அரை மணிக்குக் குறையாமல் பறவைகளை காணும் திட்டத்தை மாணவர்களுக்காக செயல் படுத்தி வருகிறார். அவரைப் பாராட்டி மகிழ்வோம்.

பறவை நோக்குதலில் ஈடுபடுவோம்! பறவைகளைக் காப்போம்!

சிறகு – இதழ் 2 (ஏப்ரல்-ஜூன் 2017) Read More »