உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் தாக்கம் மக்களிடையே மேலும் பரவமால் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நோயின் தீவிரத்தன்மையை அறிந்து எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
இந்நிலையில் வீட்டிலிருக்கும் 21 நாட்களும் அனைவருக்கும் ஏதேனும் சில பொழுதுபோக்குகள் நிச்சயம் தேவைப்படும். அவற்றுள் ஒன்றாக இயற்கை எழுத்துப் போட்டிகளை சேலம் பறவையியல் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இயற்கை மற்றும் பறவைகள் சார்ந்த உங்கள் சுவாரசிய அனுபவங்களை எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசையா? இதோ உங்களுக்கான வாய்ப்பும் நேரமும் தற்போது உள்ளது.
போட்டியின் விதிமுறைகள்
- இயற்கையின் மீது ஆர்வமுள்ள அனைத்து வயதினரும் (குறிப்பாக சேலம் மாவட்டத்தில்) இதில் கலந்து கொள்ளலாம்.
- இயற்கை மற்றும் பறவைகள் சார்ந்த உங்கள் அனுபவங்களை நான்கு வழிகளில் எழுதலாம். அவை 1. சிறுகதை, 2. கட்டுரை, 3. கவிதை, மற்றும் 4. நாடக வடிவம்.
- படைப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.
- ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
- சமர்ப்பிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும் அனைத்து படைப்புகளும் சேலம் பறவையியல் கழகத்தின் வலைதளத்தில் வெளியிடப்படும். அதன் பிறகு அவற்றை நீங்கள் எப்போதும் எங்கிருந்து வேண்டுமானாலும் மீண்டும் வாசிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம். (படைப்புகளில் சில திருத்தங்கள் தேவைபட்டால் அதைச் செய்ய ஆசிரியருக்கு உரிமை உண்டு).
- சிறந்த எழுத்துகள் சில சிறந்த இதழ்களில் பிரசுரிக்க ஏற்பாடு செய்யப்படும்.
- படைப்புகள் அனைத்தும் (கவிதை தவிர) குறைந்தபட்சம் 250 வார்த்தைகளாவது இருக்க வேண்டும்.
- கலந்துகொண்டு படைப்புகளை சமர்ப்பிக்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் உண்டு.
- இந்தப் போட்டி குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க வாட்சப் குழு ஒன்றையும் துவக்கியுள்ளோம். போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் 7598123614 என்ற எண்ணிற்கு வாட்சாப்பில் தொடர்பு கொள்ளவும்.
இந்தப் போட்டியில் பங்குகொள்ள வீட்டை விட்டு வெளியே வரத் தேவையில்லை. இதைக் காரணமாகக் கொண்டு மக்கள் யாரும் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஒரு வேளை இந்தப் போட்டியை காரணம் காட்டி யாரேனும் வெளியில் வந்தால் அதன் விளைவுகளுக்கு சேலம் பறவையியல் கழகம் பொறுப்பாகாது.
முக்கியக் குறிப்பு: அனைத்து எழுத்துகளும் Microsoft Word Documentல் தட்டச்சு செய்யப்பட்டு [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட வேண்டும். நீங்கள் அனுப்பும் word fileல் கீழுள்ள தகவல்கள் அவசியம் இருக்க வேண்டும்.
- பெயர் மற்றும் வயது: …………………………………………..
- தொழில்: ………………………………..
- மாணவராக இருந்தால் பள்ளி (அ) கல்லூரியின் பெயர்: …………………………
- உங்கள் தாலுகா & மாவட்டம்: …………………… & சேலம்.
- எழுத்து வடிவம்: சிறுகதை / கட்டுரை / கவிதை / நாடக வடிவம்
- தலைப்பு: …………………………………………
- மின்னஞ்சல்: ……………………………………….
- அலைபேசி எண்: …………………………………
சேலத்தின் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்தப் போட்டி சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்று நம்புகிறோம். அடுத்த 21 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது மட்டுமே மத்திய, மாநில அரசின் முயற்சிகளுக்கு நாம் தரக்கூடிய மிகப்பெரிய ஒத்துழைப்பாக அமையும். மனிதகுலத்திற்கு ஏற்பட்ட சவால்களை நாம் ஒன்றிணைந்தே வென்றுள்ளோம். அதைப்போலவே ஒன்றுபட்டு கொரோனாவை வீழ்த்துவோம்.
சேலம் பறவையியல் கழகம், தமிழ்நாடு, இந்தியா.