சிறகு – இதழ் 3 (ஜூலை–செப்டம்பர் 2017)
தமிழில்: தி. அருள்வேலன்
தலையங்கம்
“தென்மேற்குப் பருவமழையுடன் இயைந்த இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டு, பறவை ஆர்வலர்களுக்கு விறுவிறுப்பான பருவமாக அமைந்தது. குறிப்பிடத்தக்க சில புதிய சாதனைகள், மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டங்கள், பறவைகளுக்கென ஒரு புதிய கழகம் என இன்னும் பல. வலசைப்பறவைகளில் சிலவும் வந்து விட்டன. பறவை ஆர்வலர்களுக்கு கொண்டாட்டமான பருவம் தொடங்க வாழ்த்துக்கள்! eBird வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட பறவை சார்ந்த தகவல்கள் மட்டுமே இந்த இதழில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இவ்விதழ் DARTER என்ற பெயரில் வெளியாகிறது.” –சு.வே.கணேஷ்வர்.
மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டங்கள்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டாரவள ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையை ஒன்றிய அளவில் இரண்டு கட்டங்களாக ஜூலை 10-14 மற்றும் 24-28 நடத்தியது. இப்பட்டறையில் நமது சேலம் பறவையியல் கழகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஆசிரியர்களுக்கு, பறவைகள் பார்த்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் 42 அமர்வுகள் நடத்தினர். இவ்வமர்வின் வழி நமது கழகத்தின் ஆறு கருத்தாளர்கள் 4,206 ஆசிரியர்களுக்கு பறவைகள் பற்றிய விழிப்புணர்வை கொண்டு சேர்த்தனர். அதன் விவரங்கள் விவரங்கள் பின்வருமாறு:
எண் |
ஒன்றியம் |
கருத்தாளர் பெயர் |
தேதி 2017 |
முதல் கட்டம் I | இரண்டாம் கட்டம் II
|
1 | காடையம்பட்டி | தமிழ்ச்செல்வன் | ஜூலை
13 & 25 |
140 |
136 |
2 |
ஏற்காடு | தமிழ்ச்செல்வன் | ஜூலை
14 & 27 |
48 | 47 |
3 | அயோத்தியாபட்டணம் | இளவரசன் | ஜூலை
11 & 27 |
90 |
90 |
4 |
வாழப்பாடி | இளவரசன் , கலைச்செல்வன் | ஜூலை
12 & 26 |
90 | 100 |
5 | பெத்தநாயக்கன்பாளையம் | இராஜாங்கம் | ஜூலை
12 & 26 |
82 |
99 |
6 |
ஆத்தூர் | இராஜாங்கம் | ஜூலை
14 & 27 |
99 | 99 |
7 | தலைவாசல் | கலைச்செல்வன், இராஜாங்கம் | ஜூலை
13 & 27 |
76 |
96 |
8 |
கங்கவல்லி | கலைச்செல்வன் | ஜூலை
13 & 27 |
66 | 75 |
9 |
ஓமலூர் | செந்தில்குமார் | ஜூலை
10 & 24 |
101 |
163 |
10 | மேச்சேரி | செந்தில்குமார் | ஜூலை
10 & 25 |
91 |
109 |
11 |
நங்கவல்லி | செந்தில்குமார் | ஜூலை
11 & 25 |
113 | 117 |
12 | கொங்கணாபுரம் | செந்தில்குமார் | ஜூலை
12 & 26 |
66 |
23 |
13 |
மகுடஞ்சாவடி | செந்தில்குமார் | ஜூலை
12 & 26 |
71 | 74 |
14 | கொளத்தூர் | செந்தில்குமார் | ஜூலை
13 & 27 |
101 |
96 |
15 |
எடப்பாடி | செந்தில்குமார் | ஜூலை
14 & 28 |
93 | 100 |
16 | சேலம் நகர்ப்புறம் | கணேஷ்வர் | ஜூலை
10 & 24 |
184 |
224 |
17 |
சேலம் கிராமப்புறம் | கணேஷ்வர் | ஜூலை
10 & 25 |
134 | 138 |
18 | பனமரத்துப்பட்டி | கணேஷ்வர் | ஜூலை
11 & 26 |
83 |
90 |
19 |
வீரபாண்டி | கணேஷ்வர் | ஜூலை
11 & 26 |
106 | 110 |
20 | சங்ககிரி | கணேஷ்வர் | ஜூலை
13 & 28 |
81 |
95 |
21 |
தாரமங்கலம் | கணேஷ்வர், இளவரசன் | ஜூலை
13 & 28 |
113 |
97 |
ஆசிரியர்களின் எண்ணிக்கை பட்டறை 1 & 2 |
2028
|
2178
|
|||
மொத்தம் |
4206 |
இரண்டு அரிய பதிவுகள்
- 1929ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்காட்டில் செதில் வயிற்று மரங்கொத்தியை STREAK-THROATED WOODPECKER தணிகைவேலு முதல் புகைப்படத்துடன் ஆகஸ்ட் 12, 2017 அன்று பதிவு செய்துள்ளார். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
- செப்டம்பர் 17, 2017, அன்று வெங்கட்ராமன் இராஜமாணிக்கம் பழுப்பு காட்டு ஆந்தையை BROWN WOOD OWL ஏற்காட்டில் கண்டு புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த ஆந்தை சேலத்தில் இரண்டாவது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நம் மாவட்டத்தில் இதுவே அதன் முதல் ஒளிப்படமாகும். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
குறிப்பிடத்தக்க பதிவு
செப்டம்பர் 26, 2017, அன்று பிரவீன் மணிவண்ணன், ஏற்காட்டில் 10 மலை உழவாரன்களைக் ALPINE SWIFT கண்டு பதிவு செய்துள்ளார். பத்துப் பறவைகளை ஒன்றாகப் பார்த்தது குறிப்பிடத்தக்கப் பதிவாகும். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வலசைப்பறவைகளின் முதல் வருகை (2017-18ம் ஆண்டிற்கான வலசை காலத்திற்கு)
எண். |
பொதுப்பெயர் | பறவை ஆர்வலர் | முதல் வருகை 2017-18 |
1 | சாம்பல் வாலாட்டி
Grey Wagtail
|
முருகேஷ் நடேசன் |
செப்டம்பர் 2 |
2 |
பொரி உள்ளான்
Wood Sandpiper |
முருகேஷ் நடேசன் |
செப்டம்பர் 7 |
3 |
மண்கொத்தி உள்ளான் Common Sandpiper | கோகுல் வடிவேல் | செப்டம்பர் 14 |
4 | தகைவிலான் Barn Swallow | இளவரசன் |
செப்டம்பர் 17 |
5 |
மீசை ஆலா Whiskered Tern | இளவரசன் | செப்டம்பர் 23 |
6, 7 | பச்சைக் கதிர்க்குருவி
Green Warbler & Greenish Warbler |
தணிகைவேலு |
செப்டம்பர் 29 |
8 |
புஞ்சைக் கழுகு Booted Eagle | கோகுல் வடிவேல் | செப்டம்பர் 29 |
9 | ஆற்று உள்ளான்
Green Sandpiper |
கோகுல் வடிவேல் |
செப்டம்பர் 29 |
சேலம் பறவையியல் கழகம் துவக்க விழா
வரலாற்றுச் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த நிகழ்வாக சேலம் பறவையியல் கழகத்தின் துவக்க விழா செப்டம்பர் 30, 2017 அன்று சேலம் உருக்காலை சமுதாயக்கூடத்தில் நடை பெற்றது. இக்கழகம் பறவைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான முதல் மற்றும் தனித்துவமான அமைப்பாகும். மேலும் விவரங்களுக்கு: www.salembirds.wordpress.com
தி. ஜெயமுருகன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் விழாவினை சிறப்பாக தொகுத்தளித்தார். அவர் பறவைகளின் மேல் கொண்ட பற்றின் காரணமாக தானே பாட்டெழுதி, அதை இசையமைத்து, ஒரே பாடலில் 24 பறவைகளைப் பற்றிப் பாடினார். ர.கி. லால், அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். ப. சஹஸ்ரநாமம் விழாவிற்கு தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். விழாவின் சிறப்பு நிகழ்வாக கிருஷ்ணம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தொகுத்து வழங்கிய பறவைகள் பாதுகாப்பு மற்றும் பங்களிப்பு பற்றிய அருமையான குறுநாடகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சு.வே. கணேஷ்வர் கழகத்தின் தலையாய நோக்கங்களையும் குறிக்கோள்களையும் எடுத்துரைத்தார். அதில் குறிப்பாக பார்வையற்றோருக்கும், காது கேளாதோருக்கும், திருநங்கைகளுக்கும் இயற்கையின் விந்தைகளை பறவைகளின் வாயிலாக உணர்ந்து மகிழும் வண்ணம் செயல்பாடுகள் அமையும் என்று தெரிவித்தார்.
சூழலியல் எழுத்தாளரும், காட்டுயிர் பாதுகாப்பு முன்னோடியுமான சு. தியடோர் பாஸ்கரன் அவர்களின் முதன்மையுரை விழாவின் மணிமகுடமாக அமைந்தது. இயற்கையும் சுழலும் அறிவியலும் எவ்வாறு அனைத்து உயிர்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்பதை அனைவர்க்கும் விளங்குமாறு திறம்பட எடுத்துரைத்தார். கால்நடை மருத்துவர் ம. ரவி நன்றியுரையாற்றினார்.
விழா நடந்த சமுதாயக்கூடத்தில் காலை முதல் மாலை வரை பறவைகள் பற்றிய கண்கவர் ஒளிப்படக் கண்காட்சி இடம்பெற்றது மிகப்பொருத்தமாக இருந்தது. இக்கண்காட்சியில் பாறும் ஊரும் புகழ் அருளகம் பாரதிதாசன், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் சொ.சுப்ரமணியன், ஆசிரியர் மற்றும் பறவை ஆர்வலர் கலைச்செல்வன், வெங்கட்ராமன் இராஜமாணிக்கம் மற்றும் சொ. சுப்ரமணிய சிவா ஆகியோரது ஒளிப்பட வங்கியிலிருந்து பெறப்பட்ட உயிரோட்டமுள்ள ஒளிப்படங்கள் இடம்பெற்றன.
பறவை ஆர்வலர்கள் அருகிலுள்ள நேரு பூங்காவில் “பறவை நோக்குதலில்” கலந்து கொண்டு பறவைகளை அடையாளம் காணுதல், பறவை நோக்குதலின் முக்கியத்துவம் போன்ற பல தகவல்களைக் கற்றுக்கொண்டு பலனடைந்தனர். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
சிறகு – இதழ் 3 (ஜூலை–செப்டம்பர் 2017) Read More »