தமிழில்: தி. அருள்வேலன்
தலையங்கம்
“நமது சிறகு செய்தி மடலின் முதல் காலாண்டு இதழானது விஞ்ஞானிகள், மூத்தப் பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை விரும்பிகள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதரவும் ஆலோசனையும் வழங்கிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. ஏறக்குறைய அனைத்து வலசை பறவைகளும் அவற்றின் இனப்பெருக்க இடங்களுக்கு திரும்பி விட்டாலும் நமது பறவை ஆர்வலர்களின் தணியாத பறவைத்தாகம் கோடையின் வெப்பத்தையும் மிஞ்சியது. அதுமட்டுமல்ல பல புதிய பதிவுகளுக்கும் வித்திட்டது. முதல் முறையாக, இத்தகு ஆர்வம், வலசை திரும்பாத சில பறவைகளை நாம் படிப்பதற்கும் உதவியாக இருந்துள்ளது. eBird வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட பறவை சார்ந்த தகவல்கள் மட்டுமே இந்த இதழில் பயன் படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இவ்விதழ் DARTER என்று வெளியாகிறது” – சு.வே. கணேஷ்வர்.
இரண்டாவது பதிவு (1)
சேலம் மாவட்டத்தில் காண்பதற்கு அரிய பூமன் ஆந்தையை BROWN FISH OWL 1929ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் 14, 2017 அன்று கோகுல் வடிவேல் மற்றும் தணிகைவேலு (இருவரும்) மீண்டும் கப்புத்தியில் கண்டு சாதனை படைத்தனர். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
சங்குவளை நாரை மற்றும் பிற நீர்ப்பறவை கூட்டங்கள்
250க்கும் மேற்பட்ட சங்குவளை நாரைகள் மற்றும் வெண்கழுத்து நாரை, கூழைக்கடா, உள்ளான் இன்னும் பிற நீர்ப்பறவைக் கூட்டங்களை கலைச்செல்வன் பதிவு செய்துள்ளார். அது பற்றிய செய்திகள் ஏப்ரல் 25 தினமணி, காலைக்கதிர் நாளிதழ்களிலும் ஏப்ரல் 26 தினமணி, தினகரன் நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டது. முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
புதிய பதிவு (1)
கோகுல் வடிவேல் சேலம் வடமநேரி ஏரியில் மே 1, 2017 அன்று, முதல் முறையாக செவ்வால் வானம்பாடியை RUFOUS-TAILED LARK கண்டு பதிவு செய்தார். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
ஓரிடவாழ் பறவைகள் நாள் மற்றும் புதிய பதிவு (2)
மே 13, 2017 அன்று சேலத்தில் மூன்றாம் ஓரிடவாழ் பறவைகள் நாள் ENDEMIC BIRD DAY கொண்டாடப்பட்டது. உள்ளூர் பறவைகள் உட்பட மொத்தம் 106 பறவையினங்கள் கணக்கெடுக்கப்பட்டது. பறவை ஆர்வலர்கள் கோகுல் வடிவேல், முருகேஷ் நடேஷன், தணிகைவேலு, ரமேஷ்குமார், கார்த்திகேயன், அருள்வேலன் மற்றும் கணேஷ்வர் பங்கு பெற்றனர். அவர்கள் புது ஏரி, கன்னங்குறிச்சி மூக்கனேரி மற்றும் சேர்வராயன் மலையின் பல பகுதிகளில் பறவைகளைக் கண்டனர். சேலத்தில் முதல் முறையாக கப்புத்திப் பகுதியில் கரிச்சான் குயிலைக் FORK-TAILED DRONGO-CUCKOO கண்டு பதிவு செய்தனர். ஆசிரியர் இராஜாங்கம் மற்றும் மாணவர்கள் ஆத்தூர் தாலுகாவிலும், சுப்ரமணிய சிவா ஓமலூர் தாலுகாவிலும் கணக்கெடுப்பு நடத்தினர்.
செய்தித்தாள்களில் கொம்பன் ஆந்தை
கொம்பன் ஆந்தை INDIAN EAGLE OWL பரவலாகக் காணப்பட்டாலும் அதைப்பற்றிய சில முக்கியத் தகவல்களை கலைச்செல்வன் நேர்பட முன்னெடுத்தார். அவ்வாந்தை பற்றிய முறையான செய்திகள் காலைக்கதிர், தினமணி, தினகரன், தினமலர் நாளேடுகளில் மே 19, 2017 அன்று வெளியிடப்பட்டது.
இரண்டாம் பதிவு (2)
சேலம் மாவட்டத்தில் 2014ம் ஆண்டு முதல்முறையாக பெரிய பூநாரை பதிவு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மே 23, 2017 அன்று சுப்ரமணிய சிவா மேட்டூர் தாலுகாவில் உள்ள பன்னவாடி அருகே பெரிய பூநாரையை GREATER FLAMINGO மீண்டும் கண்டு சாதனை படைத்தார். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
அகில இந்தியத் தூக்கணாங்குருவிகள் கணக்கெடுப்பு
பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் Bombay Natural History Society இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தூக்கணாங்குருவி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இவ்வாண்டு ஜூன் 4 – 10 தேதிகளில் கணக்கெடுப்பு நடைபெற்றது. ஆத்தூர் தாலுகாவில் இராஜாங்கமும் அவரது மாணவர்களும் தளவாய்பட்டி ஏரி, ஒட்டப்பட்டி மற்றும் அரியபாளையம் பகுதிகளில் 59 ஆண் மற்றும் 89 பெண் உள்ளிட்ட 148 தூக்கணாங்குருவிகளைப் பதிவு செய்தனர். அவர்கள் 42 முழுமையான மற்றும் 105 முழுமையற்ற கூடுகளையும் கணக்கிட்டனர்.
புதிய பதிவு (3)
கோகுல் வடிவேல் சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக வெண்கழுத்துப் பட்டாணிக்குருவியை WHITE-NAPED TIT ஜூன் 1, 2017 அன்று கண்டு பதிவு செய்தார். இது குறிப்பிடத்தக்க மற்றும் எதிர்பாராத ஒன்றாகும். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
பிற முக்கியப் பதிவுகள்
முருகேஷ் நடேசன் மற்றும் தணிகைவேலு ஜூன் 6, 2017 அன்று கப்புத்திப் பகுதியில் செவ்வயிற்றுக் கழுகைக் RUFOUS-BELLIED EAGLE கண்டு பதிவிட்டனர். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
முருகேஷ் நடேசன் ஜூன் 18, 2017 அன்று வடபட்டி பகுதியில் வர்ண சுண்டங்கோழியை PAINTED SPURFOWL அதன் மூன்று குஞ்சுகளுடன் கண்டு பதிவிட்டார். முழுப்பட்டியலைக் காண இங்கு சொடுக்கவும்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வலசைப்பறவைகள்
கோடைக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட சில வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வலசைப்பறவைகளின் விவரங்கள். வலசைப் பறவைகள் எதுவும் இங்கு இனப்பெருக்கம் செய்யாது. முழுப்பட்டியலை காண தேதியை சொடுக்கவும்.
வ.எண் |
பறவையின் பெயர் |
ஆர்வலர் பெயர் |
2016-17 வலசைக் காலத்தில் கடைசிப் பதிவு |
1 |
செவ்வால் மைனா Chestnut-tailed Starling | ம. இளவரசன் | |
2 |
சோளக்குருவி Rosy Starling | முருகேஷ் நடேசன் | 3 April |
3 | நீலச்சிறகி Garganey | முருகேஷ் நடேசன் | |
4 |
நீலத்தலை பூங்குருவி Blue-capped Rock Thrush | முருகேஷ் நடேசன் | 5 April |
5 | Sykes’s Warbler | முருகேஷ் நடேசன் | |
6 |
செவ்வால் ஈப்பிடிப்பான் Rusty-tailed Flycatcher | தணிகைவேலு | 6 April |
7 | பெயிலான் கானாங்கோழி Baillon’s Crake | ம. இளவரசன் | |
8 |
பெரிய நாணல் கதிர்க்குருவி | ம. இளவரசன் | 14 April |
9 | பழுப்புத்தலை கடற்காகம் | கலைச்செல்வன் | |
10 |
சாம்பல் வாலாட்டி Grey Wagtail | ம. இளவரசன் | 18 April |
11 | Booted Warbler | தணிகைவேலு | |
12 |
பழுப்புக் கீச்சான் Brown Shrike | முருகேஷ் நடேசன் | |
13 |
சாம்பல் கரிச்சான் Ashy Drongo | முருகேஷ் நடேசன் |
|
14 |
ஆறுமணிக்குருவி Indian Pitta | முருகேஷ் நடேசன் | |
15 |
பச்சைக் கதிர்க்குருவி Green Warbler | தணிகைவேலு | |
16 |
சிவப்பு வல்லூறு Eurasian Kestrel | கோகுல் வடிவேல் | |
17 |
பிளைத் நாணல் கதிர்க்குருவி Blyth’s Reed Warbler | முருகேஷ் நடேசன் | |
18 |
ஆற்று உள்ளான் Green Sandpiper | கோகுல் வடிவேல் | 1 May |
19 | Greenish Warbler | சு.வே. கணேஷ்வர் | |
20 |
மண்கொத்தி உள்ளான் Common Sandpiper | கோகுல் வடிவேல் | 15 May |
21 | பொரி உள்ளான் Wood Sandpiper | அனுனிதா KP | |
22 |
தகைவிலான் Barn Swallow | முருகேஷ் நடேசன் | 23 May |
23 | மீசை ஆலா Whiskered Tern | சுப்ரமணிய சிவா | |
24 |
பெரிய பூநாரை Greater Flamingo | சுப்ரமணிய சிவா | 23 May |
25 | மஞ்சள் வாலாட்டி Western Yellow Wagtail | சுப்ரமணிய சிவா |
பொதுவுலகத்தொடர்பு
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாவட்ட அளவிலான வட்டார வள ஆசிரியர்கள் பயிற்சிப்பட்டறை ஒன்று ஜூன் 15, 2017 அன்று சேலம் AVS பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சு.வே. கணேஷ்வர் பட்டறையில் கலந்து கொண்ட 117 ஆசிரியர்களுக்கு பறவைகளின் சிறப்பு பற்றி கலந்தாய்வு மூலம் எடுத்துரைத்தார். மேலும், பிற பறவைக் கருத்தாளர்கள் இது போன்ற பட்டறைகள் மூலம் 15 மாவட்டங்களில் 1951 ஆசிரியர்களுடன் கலந்துரையாடி பறவை காணும் ஆர்வத்தை வளர்த்தெடுத்தனர்.
மாணவர்ப் பகுதி
“துளிர் அறிவியல் திருவிழாவில் கலந்து கொண்ட அந்நாள் மறக்க முடியாதது. பல அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது பறவைகள் பார்த்தல் பற்றியது. அவ்வமர்வு என்னை ஊக்கப்படுத்தியது, வாழ்க்கையின் வேறு கோணத்தை காண உதவியது. அன்றிலிருந்து பறவைகள் பற்றிய செய்திகள் சேகரிக்கவும் வித விதமான பறவைகளை பார்க்கவும், நேசிக்கவும் மனம் விழைந்தது. அதனைத்தொடர்ந்து எனது பேராவல் காரணமாக கோடை விடுமுறையை பறவைகளை நேரில் கண்டும் பறவைகள் பற்றிய உருவங்கள் உண்டாக்கும் காகித கலையில் ஈடுபட்டும் மகிழ்ந்தேன், நிறைவடைந்தேன். இயற்கை சூழலையும், பறவைகளையும் பாதுகாப்பது நமது கடமையாகும்”. செ.சுப்ரமணிய சிவா, ஒன்பதாம் வகுப்பு மாணவர்.
வாராந்திரப் பறவை நோக்குதல் திட்டம்
ஆத்தூர் தாலுகா தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் இராஜாங்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வகுப்பு முடிந்த பிறகு அரை மணிக்குக் குறையாமல் பறவைகளை காணும் திட்டத்தை மாணவர்களுக்காக செயல் படுத்தி வருகிறார். அவரைப் பாராட்டி மகிழ்வோம்.
பறவை நோக்குதலில் ஈடுபடுவோம்! பறவைகளைக் காப்போம்!