சிறகு — இதழ் 1 (ஜனவரி—மார்ச் 2017)

தமிழில்: தி. அருள்வேலன்

தலையங்கம்

சேலம் மாவட்டத்தில் பல அழகிய, சிறப்புமிக்க பறவைகள் இருப்பினும் அண்மைக்காலமாக பறவை ஆர்வலர்கள் இல்லாதது ஆச்சரியமளித்தது. நம்மைச் சுற்றியுள்ள இயற்கை செல்வங்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் தான் அதை முறையாக காப்பாற்ற இயலும். எனவே சேலம் மாவட்டப் பறவைகளைப் பற்றிய செய்திகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்ற என் ஆர்வத்திற்கு உத்வேகம் அளித்தது மைசூர் பறவை ஆர்வலர்களின் போற்றுதலுக்குரிய பறவைகளை ஆவணப்படுத்தும் செயல்பாடுகள் தான். உலகமே போற்றும் வங்காரி மாத்தாய் அவர்களின் பிறந்த நாளான இன்று, சேலம் மாவட்டப் பறவைகளைப் பற்றிய “சிறகு” என்னும் முதல் செய்தி மடலை வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். ஆங்கிலத்தில் இது DARTER என வெளியாகிறது. இம்மடல் சேலம் பகுதி சார்ந்த பறவைகளைப் பற்றிய செய்திகள், குறிப்புகள், விழாத்தகவல் என அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியதாகும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பறவைகள் சம்பந்தமான தங்களது படைப்புகளை இங்கே சமர்ப்பிக்கலாம். இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் என் பல எதிர்பார்ப்புகளைக் கடந்து விட்டது. கடந்த மூன்று மாத காலத்தில் நடைபெற்றுவரும் விறுவிறுப்பான பறவைசார் செயல்கள் அனைவரையும் தட்டி எழுப்பி வருகிறது. நான்கு வருடங்களுக்கு முன் எவ்வித செயல்பாடுகளும் இல்லாமல் இருந்த மாவட்டத்தில் இன்று தணியாத ஆர்வமும் மாறாத உழைப்பும் கொண்ட புதிய பறவை ஆர்வலர்கள் உருபெறத்துவங்கியுள்ளனர். உடனடி மாற்றங்கள் நிகழவில்லை என்றாலும் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடிய மாற்றங்கள் மெதுவாக நிகழ்ந்தாலும் அதுவே உண்மையான வெற்றியாகும். கூட்டு முயற்சியினால் கிடைக்கப்பெறும் பலன்கள் மட்டுமே இதற்கு வழி வகுக்கும்.

சேலம் சார்ந்த பறவைகள் பற்றிய செய்திகள், பறவைகளைப்பற்றிய அனைவரது ஆர்வத்தையும் மேம்படுத்துவதற்கு, நமது சிறகு முன்னேர் ஆக விளங்கும் என்று நம்புகிறேன். நாம் சுற்றுச்சுழலை போற்றுவதும் பறவைகளின் நல்வாழ்வை புரிந்துகொண்டு முன்னெடுப்பதும் அடுத்த தலைமுறைக்கு நாம் காப்பற்றித்தரும் இயற்கை கொடையாகும்.

DARTER இதழ் பெயர்க்காரணம்

ஏற்கனவே பலரும் அறிந்த பறவைப்பெயர்கள் பல இருக்கின்றன. எனவே அதிகம் கேள்விப்படாத ஆனால் அளவில் பெரிய, பார்த்தவுடன் பரவசம் தரும், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மற்றும் சேலம் பகுதி எங்கும் காணக்கிடைக்கும் பறவையான அழகிய பாம்புத்தாராவை தேர்வு செய்தேன்.

அதன் கழுத்து நமது சேலம் மாவட்டத்தின் ஆங்கில எழுத்தான S போன்று உள்ளது மேலும் அழகு சேர்க்கும். பாம்புத்தாரா எனக்கு பிடித்தமான பறவை. நீங்களும் அதனை விரும்பப்போவதும் கொண்டாடப்போவதும் திண்ணம். -சு.வே. கணேஷ்வர்.

1 Darter by Samyak Kaninde
பாம்புத்தாரா by சம்யக் கணின்டே
புதிய பதிவு (1)

ம. இளவரசன், ஜனவரி 8, 2017 அன்று சேலத்தில் முதன்முறையாக கன்னங்குறிச்சி மூக்கனேரியில், மலை மீன்கொத்தியை STORK-BILLED KINGFISHER பதிவு செய்துள்ளார். சேலம் மாநகருக்குள் இப்பறவையை கண்டு பதிவு செய்தது ஆச்சர்யமான ஒன்றாகும். மலை மீன்கொத்தியோடு பார்க்கப்பட்ட பிற பறவைகளின் பட்டியலை இங்கு காண்க.

2 SBKF by Elavarasan
மலை மீன்கொத்தி. படமெடுத்தவர் இளவரசன்
3வது பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பும் புதிய பறவை ஆர்வலர்கள் குழுவின் துவக்கமும்

மூன்றாவது பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் (ஜனவரி 15—18) பொதுமக்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முதல் நாளான ஜனவரி 15 அன்று சேலம் மாவட்டத்திற்கென புதிய பறவை ஆர்வலர்கள் குழு ஒன்று “யுனைட்டட் சேலம் ஃபார் பேர்ட் லைப் “UNITED SALEM FOR BIRD LIFE” என்ற பெயரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது. இதனை சு. வே. கணேஷ்வர் துவங்கி வைத்தார். (செப்டம்பர் மாதத்தில் இக்குழு சேலம் பறவையியல் கழகம் என மாற்றம் பெறும்). பறவைகளின் எண்ணிக்கையையும் பரவலையும் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து ஆர்வலர்களையும் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் நோக்கில் துவங்கப்பட்டது. கன்னங்குறிச்சி மூக்கனேரியில் நடைபெற்ற பறவைகள் நோக்குதல் நடைபயணத்தின் (Bird Walk) மூன்று குழுக்களை கணேஷ்வர், ஜெகதீசன் கிருஷ்ணன் மற்றும் முருகேஷ் நடேஷன் தலைமையேற்று வழிநடத்தினர். அதில் சிவப்பு வல்லூறு EURASIAN KESTREL முதல் முறையாக ஏரியில் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 149 பறவையினங்கள் நான்கு நாட்களில் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இது பற்றிய செய்திக்குறிப்பு தி ஹிந்து மற்றும் தினகரன் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. அதற்காக சரவணன் மற்றும் காந்தி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

4 PBC news
In THE HINDU on January 17, 2017
புதிய பதிவு (2)

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அரவிந்த் அமிர்தராஜ், இளவரசன், கணேஷ்வர், கோகுல் வடிவேல், ஜெகதீசன் கிருஷ்ணன் மற்றும் முருகேஷன் நடேஷன் ஆகியோர், காண்பதற்கு அரிதான கொண்டைக் கரிச்சானை HAIR-CRESTED DRONGO சேலத்திலே முதல் முறையாக ஏற்காடு மலைப்பாதையில் கண்டு பதிவு செய்தனர். கரும்பச்சை கரிச்சான் போன்றே அது இருந்தாலும் அதை சரியாக ஆராய்ந்து அடையாளம் கண்டனர். அன்று மாலை கன்னங்குறிச்சி மூக்கனேரியில் சிவப்பு கானாங்கோழி, பெயிலான் கானாங்கோழி உட்பட 55 பறவையினங்களும், ஆக மொத்தம் அன்று மட்டும் 112 பறவையினங்கள் பட்டியலிடப்பட்டன.

5 HCD by Aravind Amirtharaj - Copy
ஏற்காடு மலைப்பாதையில் கொண்டைக் கரிச்சான். படமெடுத்தவர் அரவிந்த் அமிர்தராஜ்
துளிர் அறிவியல் திருவிழாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பிற்கான விழிப்புணர்வு (1)

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஜனவரி 28, 29 நாட்களில் யூனிவர்சல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் துளிர் அறிவியல் விழாவினை நடத்தினர். அவ்விழாவின் பல்வேறு அறிவியல் நடவடிக்கைககளில் பறவைகள் நோக்கலும் ஒன்று. கணேஷ்வர் மற்றும் அவருடன் தமிழ்ச்செல்வன், கௌதமி, சுபாஷ், வெங்கட், உமாபிரபா ஆகியோர் 8 அறிவியல் அமர்வுப்பாடங்கள் மாணவர்களுக்கு தந்ததுடன் அவர்களை மறுநாள் காலை பறவைகாண் நடைபயணத்திற்கு அழைத்துச்சென்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்துக்கொண்டனர். ஊர்ப்புற பறவைகள் மற்றும் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பிற்கான வழிகாட்டுதலும் விழிப்புணர்வும் கூடுதலாக அளிக்கப்பட்டது.

  • துளிர் – தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்படும் குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழாகும்.

    7 Ganeshwar bird walk
    குழந்தைகளுடன் பறவைகள் நோக்கலில் கணேஷ்வர்
வாழப்பாடி தாலுகாவில் கூடுதல் பதிவுகள்

சேலம் தாலுகாவில் ஏற்கனவே பதிவுகள் இருப்பினும், வாழப்பாடி தாலுகாவில் முதல்முறையாக கரும்பிடரி மாங்குயில் மற்றும் பொரிப்புள்ளி ஆந்தை பறவைகள் வாழ்வதை கலைச்செல்வன் பதிவு செய்தார். அதைப்பற்றிய செய்திக்குறிப்புகள் தமிழ் நாளேடுகளான தினமணி, தினகரன் மற்றும் தி ஹிந்துவில் வரப்பெற்றன.

8 Kalai Selvan news
The title in English: Rare BLACK-NAPED ORIOLE and MOTTLED WOOD OWL recorded at Vazhappadi
ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பிற்கான விழிப்புணர்வுக் கூட்டம் (2,3)

பிப்ரவரி 14, 16 கிருஷ்னம்புதூர் மற்றும் தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் வளாகப்பறவைகள் கணக்கெடுப்பு குறித்து முருகேஷன் நடேஷன் உரையாற்றினார்.

Murugesh Outreach
மாணவர்களுடன் கலந்துரையாடலில் முருகேஷ் நடேசன்
புதிய பதிவு (3)

பிப்ரவரி 16 அன்று கன்னங்குறிச்சி மூக்கனேரியில் மலை உழவாரன் ALPINE SWIFT பறவையை கணேஷ்வர் சேலத்தில் முதல்முறையாக கண்டு பதிவு செய்தார். முழுப்பட்டியலை இங்கு காண்க.

5வது ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் ஒரு புதிய பதிவு

United Salem for Bird Life ஐந்தாவது ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டி மகிழ்கிறது. தளவாய்பட்டி பள்ளி ஆசிரியர் ராஜாங்கம் மற்றும் கிருஷ்னம்புதூர் பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் வளாகப்பறவை கணக்கெடுப்பில் அவர்களது பள்ளி மாணவர்களை பங்கேற்க விருப்பத்துடன் அனுமதி அளித்ததற்கு நன்றி நவில்கிறோம்.

சேலம் பறவை ஆர்வலர்கள் பல பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை இவ்வாண்டு கணக்கெடுப்பில் செய்துள்ளனர். கன்னங்குறிச்சி ஏரியில் முதல் முறையாக கூர்வால் உள்ளான் PIN-TAILED SNIPE பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தை சார்ந்த மூன்று பறவை ஆர்வலர்கள் அவர்கள் சமர்ப்பித்த பட்டியல் எண்ணிக்கை மற்றும் தரத்தின் காரணமாக உலகின் முதல் பத்து பறவை ஆர்வலர்கள் வரிசையில் இடம் பெற்று பெருமை சேர்த்தனர். கிருஷ்னம்புதூர் மாணவர்கள் உலகத்தர வரிசையில் 35 வது இடத்தை அவர்களது பட்டியல் எண்ணிக்கை (65) மூலமாக பெற்று சாதனை செய்தனர்.  இச்செய்திகளை வெளியிட்ட தி ஹிந்து குழும சரவணன் அவர்களுக்கு நமது நன்றி உரித்தாகுக.

10 GBBC news
Source: THE HINDU
பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் (4)

பிப்ரவரி 21 அன்று பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவன உதவியுடன் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழிப்பயிற்சி வகுப்புகள் மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதுமிருந்து கலந்து கொண்ட 25 பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கணேஷ்வர் உரையாற்றினார்.

12 Ganeshwar teacher talk
ஆசிரியர்களிடம் கணேஷ்வர் உரையாற்றுகையில்… படமெடுத்தவர் கிருத்திகைவாசன் இராஜன்
முதல் சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் (5)

United Salem for Bird Life குழு மார்ச் 18 – 20 தேதிகளில் முதலாவது, சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பினை முன்னெடுத்தது. முதல் நாளன்று கணேஷ்வர் தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். அனைவரது தொடர்ந்த பங்களிப்பு மூலம் மட்டுமே சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்களையும் அதன் எண்ணிக்கையையும் ஆராய்ந்து தகுந்த செயல் திட்டங்களை வகுக்க முடியும் என்று தெரிவித்தார். தி ஹிந்து குழும சரவணன் அவர்களுக்கு மீண்டும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

13 Great Sparrow Count
In THE HINDU on March 22, 2017
மாணவர் படைப்புகள்

முருகேஷன் நடேஷன் அவர்களின் செயல்கள் மற்றும் உரையை கேட்டு ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாவது வகுப்பு மாணவி தனலட்சுமி தினந்தோறும் பறவைகளை பார்வையிட்டு பட்டியலிட ஆரம்பித்து விட்டார். அவரது பறவைச் சித்திரங்களையும் பட்டியலையும் கண்டு மகிழலாம். வாழ்க அவரது செயல், வளர்க அவரது செயல்திறம்.

Art
எட்டாம் வகுப்பு தனலட்சுமியின் படங்கள் மற்றும் குறிப்புகள்